உலகம்

இந்தியப் பயண எதிரொலி: பாகுபலி கிராஃபிக்ஸ் விடியோ பகிர்ந்த டிரம்ப்

23rd Feb 2020 10:07 AM

ADVERTISEMENT

 

'சிறந்த நண்பர்களுடன்' இருப்பதை எதிர்நோக்கியுள்ளேன் என்ற வாசகத்துடன் பாகுபலி கதாப்பாத்திரத்தில் தனது முகம் கிராஃபிக்ஸ் செய்யப்பட்ட விடியோப் பதிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

எஸ்ஓஎல் என்ற பெயருடன் உள்ள ஒரு சுட்டுரைப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வருகையை குறிப்பிட்டு பாகுபலி விடியோப் பதிவை கிராஃபிக்ஸ் செய்து பதிவிட்டிருந்தது. அதையே டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த விடியோப் பதிவில் பாகுபலி இதர கதாப்பாத்திரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, இவான்கா டிரம்ப், மெலினா டிரம்ப் மற்றும் டிரம்ப் ஜூனியர் ஆகியோரையும் கிராஃபிக்ஸ் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT