உலகம்

பிலிப்பைன்ஸில் சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் இடிந்து விழுந்த பாலம்!

2nd Feb 2020 12:13 PM

ADVERTISEMENT

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் பண்டகான் மாவட்டத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டுமானப்பணியில் இருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. 

மெட்ரோ ஸ்கைவே பாலத் திட்டத்தின் ஒரு பகுதியாக மணிலாவில் சுமார் 31.2 கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள பாலம் கட்டுமானப்பணியில் இருந்தது. இந்நிலையில், அருகில் உள்ள ஒரு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் தீ பாலத்திற்கு பரவி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையன்று இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாலத்தின் ஒரு  முழுவதுமாக சேதமடைந்துள்ளது. மேலும், தீ விபத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்த முழு தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஸ்கைவே கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் தலைவர் மார்லின் ஓச்சோவா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT