உலகம்

12 நாட்களில் திருமண உறவை முறித்துக் கொண்ட பிரபலம்

2nd Feb 2020 01:33 PM

ADVERTISEMENT

 

நடிகையும் மாடலுமான பமீலா ஆண்டர்சன், பிரபல திரைப்பட நடிகர் ஜான் பீட்டர்ஸைத் திருமணம் செய்து கொண்டார். திருமணச் சலசலப்பு முடியும் முன்னரே, அதாவது 12 நாட்களில், திருமண முறிவு செய்தியை ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 

ஜனவரி 20-ஆம் தேதி கலிபோர்னியாவின் மாலிபுவில் ஒரு தனியார் திருமண இட்த்தில் திருமணம் செய்தனர் இந்த ஜோடி.

சனிக்கிழமையன்று இவர்கள் பிரிந்த செய்தியை ஹாலிவுட் ரிப்போர்ட்டர் வெளிப்படுத்தியது, இந்த ஜோடி தங்கள் "உறவை முடித்துக் கொள்ள" முடிவு செய்துள்ளதாகக் கூறினர்.

ADVERTISEMENT

"என்னுடன் மீண்டும் இணைவதற்கு விருப்பத்துடன் இருக்கிறார் என்று மகிழ்ந்தேன். இந்த உறவில் என்ன தேவை என்பது குறித்து நாங்கள் பரீலிக்க சில காலம் ஆகலாம், உங்கள் ஆதரவுக்கு நன்றி’’ என்று ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர்களிடம் பமீலா ஆண்டர்சன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "வாழ்க்கை ஒரு பயணம், அன்பு என்பது ஒரு அசைக்க முடியாத சக்தி. இந்த உலகளாவிய உண்மையை மனதில் கொண்டு, எங்கள் திருமணத்தை வெறும் சடங்காக இல்லாமல் ஒருவர் மீது மற்றவர் அளிக்கும் மதிப்பின் பேரில் பரஸ்பரம் பிரிய முடிவு செய்துள்ளோம்," என்று கூறினார்.

பமீலாவின் நெருங்கிய வட்டம் ஃபாக்ஸ் நியூஸிடம் இது குறித்துக் கூறுகையில், "பமீலா ஏற்கனவே ஜானை நன்கு அறிந்தவர், ஆனால் மற்றவர்கள் நினைப்பதற்கு மாறாக அவருடன் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. நீங்கள் ஒருவருடன் வாழும் வரை, அவரைப் பற்றி சரிவர புரிந்து கொள்ள முடியாது ... தற்போது பமீலா ஒரு இடைவெளி கோரியிருக்கிறார் என்றும் சொல்லலாம். அவர் தனது குடும்பத்தினருடன் வசிக்க கனடாவின் லேடிஸ்மித்திலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிச் செல்கிறார்’’ என்றனர்.

ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, தம்பதியிடம் அதிகாரப்பூர்வ திருமண உரிமம் எதுவும் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT