உலகம்

ஈரான்: கரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்தது

5th Dec 2020 06:37 PM

ADVERTISEMENT

ஈரானில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

தலைநகரான டெஹ்ரான் உள்பட முக்கிய நகரங்களில் பகுதியளவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து பேசிய அதிபர் ஹசன் ருஹானி, பொதுமுடக்கத்தை மக்கள் பின்பற்றவில்லையென்றால் கூடுதலாக மற்ற பகுதிகளிலும் பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

தலைநகரான டெஹ்ரானில் அதிக அளவில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், சிவப்பு மண்டலமாக மாறிவருகிறது. மக்கள் அனைவரும் கரோனா தடுப்பிற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

இது குறித்து பேசிய சுதாகாரத்துறை செய்தித்தொடர்பாளர் சைமா சதத் லாரி, புதிதாக 12,150 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 1,028,980-ஆக அதிகரித்துள்ளது.

பகுதியளவு முடக்கம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது.  நாளொன்றுக்கு ஒரு லட்சம் கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன என்று கூறினார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT