உலகம்

கலிபோர்னியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ: பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம்

DIN

கலிபோர்னியாவின் ஆரஞ்சு கவுண்டியில் லாஸ் ஏஞ்சல்ஸின் தென்கிழக்கில் சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பகுதியைவிட்டு வெளியேறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

குறைந்த ஈரப்பதம், காற்றின் தீவிரம் காரணமாக சனிக்கிழமையன்று காட்டுத்தீ ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையங்கள் முன்னதாக சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு தெற்கு கலிபோர்னியா பகுதியில் 15,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனினும் வியாழக்கிழமை பள்ளத்தாக்குகள் வழியாக காட்டுத்தீ பிழம்புகள் குடியிருப்புப் பகுதிகளில் பரவியது. 

'லேக் பாரஸ்ட்' பகுதிக்கு அருகே இருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், பிறபகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பணியின்போது இரு வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர்களின் நிலைமை என்னவென்று தற்போது தெரியவில்லை எனவும் தீயணைப்புத் துறைத் தலைவர் பிரையன் ஃபென்னசி தெரிவித்தார். மேலும் தீ விபத்தில் எத்தனை வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை தற்போது தெரிவிக்க இயலாது என்றும் கூறினார். 

தொடர்ந்து காற்றின் தீவிரம் அதிகரித்து வருவதால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராணுவத்தின் படுகொலை பற்றிய செய்தி: புா்கினா ஃபாசோவில் பிபிசி-க்குத் தடை

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் வழிபாடு

ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி பேராசிரியரிடம் ரூ. 28.60 லட்சம் மோசடி

நாட்டுக்குத் தேவை பொது சிவில் சட்டமா? மதச் சட்டமா? அமித் ஷா பிரசாரம்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

SCROLL FOR NEXT