உலகம்

’அமெரிக்காவின் தலைமை இல்லாமல் காலநிலை பாதிப்பை சரிசெய்ய முடியாது’: ஐ.நா.

DIN

அமெரிக்காவை தவிர்த்துவிட்டு காலநிலை மாற்ற பாதிப்பை சரிசெய்ய முடியாது என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் காலநிலை மாற்றம் உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் திடீர் மழைப்பொழிவு, அதிகரிக்கும் புயல்கள், உயரும் வெப்பநிலை போன்ற சூழலியல் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்க அரசை புறந்தள்ளிவிட்டு காலநிலை மாற்ற பாதிப்பைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனளிக்காது என ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குடரெஸ், அடுத்த 30 ஆண்டுகளுக்குள் உலகளாவிய கார்பன் வெளியீடு நடுநிலைமையை அடைய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

மேலும் மனிதகுலம் இயற்கையின் மீது தற்கொலை யுத்தத்தை நடத்தி வருவதாகவும், அமெரிக்காவின் தலைமை இல்லாமல் காலநிலை அவசரநிலைக்கு தீர்வு காண வழி இல்லை என்றும் எச்சரித்தார்.

முன்னதாக கடந்த திங்கள்கிழமை காலநிலை மாற்றம் குறித்து அமெரிக்க அதிபர்(தேர்வு) ஜோ பைடனுடன் குடரெஸ் கலந்தாலோசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT