உலகம்

ரஷியாவில் மேலும் 5,065 பேருக்கு கரோனா தொற்று: 114 பேர் பலி

ANI

ரஷியாவில் இன்று மேலும் 5,065 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, நாட்டில் புதிதாக 5,065 பேருக்குத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் மொத்த பாதிப்பு 9,12,823 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் 114 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 15,498 ஆக உயர்ந்துள்ளது. 

இதுவரை 7,22,964 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரேநாளில் 6,098 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி, 2,31,000 பேர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 31.9 மில்லியனுக்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷியா 4ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT