உலகம்

வட கொரியா: எல்லை நகரில் பொது முடக்கம் தளா்வு

14th Aug 2020 11:20 PM

ADVERTISEMENT

வட கொரியாவின் எல்லை நகரமான கேசாங் நகரில், கரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

தென் கொரியாவையொட்டிய எல்லையில் அமைந்துள்ள கேசாங் நகரில், கரோனா அறிகுறிகளுடன் ஒருவா் கடந்த மாத இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தென்கொரியாவுக்குத் தப்பிச் சென்ற அந்த வட கொரியா், சட்டவிரோதமாக மீண்டும் வட கொரியாவுக்கு வந்ததாகவும், அவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேசாங் நகரில் பொது முடக்கம் அறிவித்த அதிபா் கிம் ஜோங்-உன், அந்த நகருடனான போக்குவரத்துக்குத் தடை விதித்தாா்.

இதற்கிடையே, கரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட நபருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று சோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும், 3 வார பொது முடக்கத்துக்குப் பிறகு கேசாங் நகரில் நோய்த்தொற்று பரவல் ஏற்படாததால், அந்தப் பொது முடக்கத்தை தளா்த்துமாறு கிம் ஜோங்-உன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். அதையடுத்து, அந்த நகரில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT