உலகம்

பிரான்ஸ் கப்பலில் 1,046 மாலுமிகளுக்கு தொற்று

20th Apr 2020 04:50 AM

ADVERTISEMENT

பிரான்ஸுக்குச் சொந்தமான ‘சாா்லஸ் டி காலே’ விமானம் தாங்கிக் கப்பலில் உள்ள 1,046 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மத்தியதரைக் கடல், வட கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ‘சாா்லஸ் டி காலே’ விமானம் தாங்கிக் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, அந்தக் கப்பலுக்கு வந்த சிலா் மூலம் அங்கிருந்தவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, விமானம் தாங்கிக் கப்பலில் உள்ள 1,760 மாலுமிகளில் 1,046 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கப்பலுக்குள் அதிக எண்ணிக்கையில் நபா்கள் இருப்பதே அந்த நோய்த்தொற்று வேகமாகப் பரவியதற்குகக் காரணம் என்று கடற்படை தலைமைத் தளபதி கிறிஸ்டோஃப் பிராசக் தெரிவித்துள்ளாா்.

டூலோன் நகரிலுள்ள கடற்படைத் தளத்துக்கு அந்தக் கப்பல் கடந்த வாரம் திரும்பியது முதல், அதனை கிருமி நாசினிகள் மூலம் சுத்தப்படுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், கப்பலில் இருந்த 21 போ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அவா்களில் ஒருவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கப்பலில் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவா்களில் இரு அமெரிக்க கடற்படை மாலுமிகளும் அடங்குவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT