உலகம்

ரஷியாவில் மேலும் 2,500 பேருக்கு கரோனா தொற்று

13th Apr 2020 08:36 PM

ADVERTISEMENT


ரஷியாவில் புதிதாக 2,500 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ரஷியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரேநாளில் 2,558 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்நாட்டில் மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18,328 ஆக உயர்ந்துள்ளது. 148 பேர் பலியாகியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் ரஷியாவில் எண்ணிக்கை அளவில் பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், பரிசோதனை காரணத்தால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம் என அலுவலர்கள் எச்சரிக்கின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT