உலகம்

கரோனா வைரஸ்: அமெரிக்காவின் மூன்று தந்திரங்கள்

DIN

கரோனா வைரஸை அழிக்க, உலகம் முழுவதும் கூட்டு ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அமெரிக்கா, சீனாவின் மீது அவதூறு கூறி வருகின்றது.

அமெரிக்க மக்கள், கரோனா வைரஸால் இறக்கவில்லை. அமெரிக்காவின் ஜனநாயக கட்சி, கரோனா வைரஸை வைத்து அரசியல் செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

அது மட்டுமல்லாமல், ஜனநாயக கட்சியின், எல்லை திறப்புக் கொள்கை, அமெரிக்க பொது மக்களின் ஆரோக்கியத்தையும் இன்பத்தையும் பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

டிரம்பின் இக்கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அமெரிக்காவில் கரோனா வைரஸ் பரவலின் நிலைமை தீவிரமாகியதோடு, டிரம்ப் அரசு தனது தவறுகளை மறுத்து வருகின்றது.

அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்பும், வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோவும், சீனாவின் மீது அவதூறு பரப்பி வருகின்றனர்.

சீனா கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியை சர்வதேச அமைப்புகளும் பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் பாராட்டின. சீனா, பல்வேறு நாடுகளுக்கு தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளது. சீனா, புதிய ரக கரோனா வைரஸ் பரவலை சரியாகவும் சீராகவும் தடுத்துள்ளது என்று ஐ.நாவின் துணை தலைமை செயலாளர் லாவ்கொக் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சகம், தீவிரமாக செயல்பட்டு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி அளிக்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ தெரிவித்தார்.

சீனாவுக்கு அமெரிக்கா நிறைய உதவி அளித்துள்ளது என்று அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் தெரிவித்தார்.

இப்போது வரை அமெரிக்கா சீனாவுக்கு உதவி ஒன்றும் அளிக்கவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் கங் சுவாங் தெரிவித்தார்.

உலகில் பெருமளவில் பரவி வரும் நோயைச் கட்டுப்படுத்துவதில் உலகம் ஒத்துழைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT