உலகம்

எங்களுக்கு சுதந்திரம் வேண்டி பிரதமர் மோடியிடம் வலியுறுத்த உள்ளோம்: சிந்தி மனித உரிமை ஆர்வலர் ஜாஃபர்

22nd Sep 2019 04:05 PM

ADVERTISEMENT

 

7 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு ஹூஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹூஸ்டன் நகரில் இந்தியர்கள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கிறார். 

இந்நிலையில், தங்களுக்கு சுதந்திரம் வேண்டி பிரதமர் மோடியிடம் வலியுறுத்த உள்ளதாக சிந்தி மனித உரிமை ஆர்வலர் ஜாஃபர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

பாகிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடைபெறுகிறது. எனவே எங்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தர வேண்டும் என்னும் ஒரே கோரிக்கையுடன் சிந்தி மக்கள் அனைவரும் இங்கே ஹூஸ்டன் நகருக்கு வருகை தந்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி எங்களை கடந்து செல்லும் போது அவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளோம். 

ADVERTISEMENT

 

 

நன்றி: ஏஎன்ஐ ட்விட்டர்

இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் எங்களுக்கு போதிய உதவிகளை செய்து தருவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT