வெள்ளிமணி

பணப் பிரச்னைகள் தீரும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

18th Jun 2022 04:58 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

சவால்களைப் போராட்டக் குணத்துடன் எதிர்கொள்வீர்கள். தொழில் முன்னேற்றம் அடையும்.  மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரம் மேன்மையாகத் தொடரும். உத்தியோகஸ்தர்கள் தங்களது நேரத்தைப் பயன்படுத்தி, வெற்றி காண்பீர்.  வியாபாரிகள் ஒதுக்கி வைத்திருந்த வியாபாரத்தை ஏற்று நடத்துவீர்கள். விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சலில் லாபம் கிடைக்கும்.  

அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் ஈடுபடுவர்.  கலைத்துறையினர் சுற்றுலா செல்வீர். பெண்கள் கணவரின் குடும்பத்தாரால் பாராட்டப்படுவர். மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவர்.

ADVERTISEMENT

சந்திராஷ்டமம் - இல்லை

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தடைகள் விலகி, புதிய வழிகள் புலப்படும். அரசு வழியில் சலுகை கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறந்தோருக்கு உதவி செய்வீர். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும்.  

வியாபாரிகள் புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் தக்க சமயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன் படுத்துவீர்கள்.  

அரசியல்வாதிகள் பயணம் வெற்றி பெறும். கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் கூடும். பெண்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் அனைவரிடமும் நட்புடன் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மனோபலம் அதிகரிக்கும். அமைதியாகப் பணியாற்றுவீர்கள். குடும்பத்துடன் மகிழ்ச்சியாகப் பொழுது கழியும். உடல் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்துவார்கள்.

வியாபாரிகள் கூட்டாளிகளுடன் அணுகுமுறையை மாற்றுவார்கள்.

விவசாயிகளுக்கு பிறருடனான உறவு மேம்படும். அரசியல்வாதிகள் செயற்கறிய சாதனைகளைச் செய்வார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.  பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவர்.

சந்திராஷ்டமம் - 17,18.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சிறு பலன்களால் நன்மை அதிகரிக்கும். பண வரவு உண்டாகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.  ஆற்றலும் தன்னம்பிக்கையும் கூடும். புகழும், அந்தஸ்தும் கூடும். உத்தியோகஸ்தர்கள் நல்லபடியாகப் பழகி காரியங்களை முடிப்பர்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கல் சிறப்பாகவே இருக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவர். அரசியல்வாதிகள் மேலிடத்துடன் இணைக்கமாகப் பழகுவர்.  கலைத்துறையினர் நன்கு உழைப்பர்.  பெண்களுக்கு அநாவசியப் பேச்சும், வீண் சண்டையும் வேண்டாம்.  மாணவர்கள் பெற்றோரை அனுசரித்து செல்வர்.

சந்திராஷ்டமம் - 19,20.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பணவரவு இருக்கும். புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். தொழிலில் ஏற்றத் தாழ்வு இருக்கும். முக்கிய முடிவு
களைத் தள்ளிப் போட வேண்டாம்.  

உத்தியோகஸ்தர்கள் கவனமாக உழைத்து நற்பெயரை எடுப்பார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளால் வெற்றி பெறுவார்கள்.  விவசாயிகள் நல்ல மகசூலைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். கலைத்துறையினர் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பார்கள்.  பெண்கள் ஆன்மிகத்தில் முழுமனதுடன் ஈடுபடுவார்கள். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பார்கள்.

சந்திராஷ்டமம் - 21,22.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் சுமுகமான பாகப் பிரிவினை நடக்கும். தொழிலில் பொறுப்புடன் நடந்துகொள்வீர். சுப காரியங்கள் நடக்கும். பிரச்னைகளை எதிர்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல்} வாங்கலில் சாதகமான சூழ்நிலை உருவாகும். 

விவசாயிகள் பயிர் விளைச்சலில்  லாபத்தைக் காண்பார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்தைத் திருப்திப்படுத்துவார்கள். கலைத்துறையினர் புது உத்திகளைப் புகுத்துவார்கள். பெண்கள் நிம்மதியைக் காண்பார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்}23.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராக இருக்கும். குறிக்கோளை நிர்ணயித்துக்கொண்டு  உழைப்பீர்கள்.  நேராகச் சிந்தித்து செயல்படுவீர்கள். சிறிய  தூரப் பயணம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளைச் செய்து முடித்துவிடுவார்கள்.

வியாபாரிகளின் முயற்சிகள் ஒப்புதலைப் பெறும்.  விவசாயிகளின் உழைப்பும் விடாமுயற்சியும் முன்னேற்றப் பாதையில் செல்லும்.  அரசியல்வாதிகளுக்கு ஆதரவு குறையும். கலைத்துறையினர் உற்ற நண்பர்களுக்கு புதிய வாய்ப்புகளுக்கு உதவி செய்வீர். பெண்கள் பிரச்னைகளைச் சமாளிப்பீர்கள்.

மாணவர்கள் பிறருக்கு உதவிகளைச் செய்வீர்.

சந்திராஷ்டமம் - இல்லை

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உடல் ஆரோக்கியம், மன வளம் சிறப்பாக அமையும். தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.  திட்டமிட்டுச் செயல்படுவீர்.  எதிர்ப்புகள் இருக்காது. பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய கடன் கிடைக்கும். விவசாயிகள் முழு பலன்களைப் பெறுவர். விவசாயிகளின் நிலப் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.  அரசியல்வாதிகளின் பிரச்னைகள் தீரும். கலைத்துறையினர் வேலைகளைச் சிறப்பாகச் செய்வீர்கள்.  பெண்களுக்கு குடும்பத்தில் நன்மதிப்பு உண்டாகும்.  

மாணவர்கள் புதிய படிப்பில் சேர்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கடினமாக உழைப்பீர். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். திறமைகள் வளர தொடர்ந்து உழைப்பீர். மகிழ்ச்சி நிறையும்.  

உத்தியோகஸ்கர்கள் மேலதிகாரிகளிடம் சரியாகப் பேசி நற்பலன் பெறுவர். வியாபாரம் பெருகும். விவசாயிகள்புதிய நிலங்களை வாங்குவர்.

அரசியல்வாதிகள் எதிரிகளுக்குத் தக்கப் பதிலடி தருவர். கலைத்துறையினர் கவனத்துடன் காரியமாற்றுவர். பெண்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவர். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவர்.

சந்திராஷ்டமம் - இல்லை

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பணப் பிரச்னைகள் தீரும்.  ஒதுக்கி வைத்த வேலைகளை செய்வீர். சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். விவசாயிகள் பாராட்டப்படுவர். அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் சுணக்கத்தைக் காட்டுவீர்.

கலைத்துறையினர் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று, புகழடைவீர். பெண்களுக்கு வருவாய் கிடைக்கும். மாணவர்கள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும்.

சந்திராஷ்டமம் - இல்லை

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர். தொழிலில் புதிய அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பீர்கள். அனுபவங்கள் கை கொடுக்கும். பிறருடன் அனுசரித்து நடப்பீர்கள்.

மருத்துவச் செலவுகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் பயணம் செய்ய நேரிடும். விவசாயிகள் கொடுக்கல் - வாங்கலில் நிறைவைக் காண்பார்கள். விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிரிட்டு லாபம் காண்பீர்.  

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்காக நேரத்தை ஒதுக்குவீர். கலைத்துறையினர் ஆளுமைகளை வளர்ப்பீர். பெண்களுக்கு உடன்பிறந்தோருக்கு ஆதரவு கிடைக்கும். மாணவர்கள் நற்பெயரை எடுப்பர்.
சந்திராஷ்டமம் - இல்லை

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

திட்டமிட்டுச் செயல்படுவீர். அறிமுகமில்லாதவர் உதவியும் கிடைக்கும். சுப காரியங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.  நகைச்சுவை உணர்வு அதிகரிக்கும். 
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்புக்குப் பாத்தியமாவார்கள். வியாபாரிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள்.  

விவசாயிகள் குத்தகைகளைத் தேடி பெறுவர். அரசியல்வாதிகள் கட்சிப் பணியில் அர்ப்பணித்து கொள்வார்கள். கலைத்துறையினருக்கு நற்பலன்கள் உண்டாகும். 

பெண்கள் கணவருடன் இணைக்கமாகப் பழகுவார்கள். மாணவர்கள் கவனமாக இருக்கவும்.

சந்திராஷ்டமம் - இல்லை


 

ADVERTISEMENT
ADVERTISEMENT