வெள்ளிமணி

நல்ல செய்தி காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

29th Jul 2022 04:42 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் தீவிர கவனம் செலுத்த வேண்டியிருக்கும். புதிய முதலீடுகளில் சிந்தித்து ஈடுபடவும்.  அவசியமற்ற செலவுகளைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய சூழ்நிலைகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள். வியாபாரிகள் கொடுக்கல் -  வாங்கலில் சாதகமான சூழ்நிலைகளைக் காணலாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.

ADVERTISEMENT

அரசியல்வாதிகளுக்குப் புதிய பதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பம் உண்டு. பெண்கள் கணவருடன் ஒற்றுமையாகப் பழகுவார்கள். மாணவர்கள் தடைகளைச் சுலபமாகக் கடந்துவிடுவார்கள்.
சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

புதிய இலக்குகளுடன் உழைப்பீர்கள். உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள். விவசாயிகள் விளைபொருள்களைச் சாதகமான விலைக்கு விற்பனை செய்வார்கள்.

இதையும் படிக்கலாம்: ஆடி வெள்ளியில் அம்மனுக்கு உகந்தது: பெண்கள் இதைச் செய்ய மறக்காதீங்க!

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்களைச்  செய்துமுடிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு விருது பெறும் வாய்ப்பு கிடைக்கும். பெண்கள் உறவினர்களுடன் அனுகூலமாக நடப்பார்கள்.  மாணவர்கள் பிறரோடு விட்டுக் கொடுத்து சகஜமாகப் பழகுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

இழுபறியான பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.  பூர்விகச் சொத்துகளில் பாகப் பிரிவினை உண்டாகும்.

சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் வேலைகளைப் புரிந்துகொண்டு பணியாற்றுவார்கள். வியாபாரிகள்புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார்கள். விவசாயிகள் கால்நடைகளால் பலன் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் எவருக்கும் வாக்கு கொடுக்கக் கூடாது. கலைத் துறையினர் பாசத்துடன் பழகுவார்கள். பெண்கள் கணவரின் பாசத்தைப் பெறுவார்கள். மாணவர் - ஆசிரியர் உறவு மேம்படும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வருவாய் இருக்கும். கடன்களை அடைப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும்.  கடும் உழைப்புக்குப் பிறகு ஓய்வு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்பு தென்படும். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் மேன்மையடைவார்கள்.  விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளை உபயோகிப்பார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய திறமைகளை வளர்த்துக் கொள்வார்கள். பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்களின் கீழ்பணிபுரிவோருக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள்.  கற்பனை சக்தியும், சமுதாயத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் அன்பாக நடந்துகொள்வார்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை விற்பனை செய்வீர்கள். விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் கட்சிக்கு நல்ல பெயரை உண்டாக்குவார்கள். கலைத்துறையினருக்கு வருவாய், கௌரவம் அதிகரிக்கும்.   பெண்கள் கணவர் வழி உறவினர்களை அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கூடும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தேவைக்கேற்ப பண வரவு உண்டாகும். புகழ், செல்வாக்கு உயரும்.  நல்ல செய்திகள் வந்து சேரும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வார்கள். வியாபாரிகள் நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். விவசாயிகள் பாசன வசதிகளுக்குச் செலவு செய்வார்கள்.

அரசியல்வாதிகளின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.  கலைத்துறையினருக்கு அனுபவம் தரும் பயணங்கள் கிடைக்கும்.

பெண்கள் புதிய ஆடை, அணிகலன்களை வாங்குவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தாமதமாக நடந்துவந்த காரியங்கள் சுலபமாக நடந்தேறும். புதிய இலக்கோடு உழைப்பீர்கள்.  கடன்கள் வசூலாகும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் அறிமுகம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய பொருள்களை வாங்கி, விற்பனை செய்வார்கள். விவசாயிகள் புதிய நிலங்களை வாங்க முன்பணம் கொடுப்பார்கள்.

இதையும் படிக்கலாம்: மங்கள வாழ்வு அருளும் கூகூர் குகேசுவரரர் திருக்கோயில்

கலைத்துறையினர் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவார்கள். மாணவர், பெற்றோர், ஆசிரியர் உறவு சீராகவே இருக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் அலைச்சல் குறையும். சிந்தித்து செயல்படுவீர்கள். ஆன்றோர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெறுவீர்கள்.  திருப்பணிகளுக்கும், தர்மத்துக்கும் உதவுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவம் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிறப்புகளைக் காண்பீர்கள். விவசாயிகள் நல்ல மகசூலைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பு கூடும். கலைத் துறையினர் மனம் விரும்பும் விஷயங்களைத் திறம்பட செய்வார்கள். பெண்கள் திருத்தலங்களுக்குச் சென்று வருவார்கள்.  மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.  திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.  நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் மேன்மையைக் காண்பார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் காரியங்களைச் சரியாகச் செய்து முடிப்பார்கள். கலைத்துறையினருக்குப் பாராட்டுகள் கிடைக்கும்.

பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் புதிய இலக்குகளை எட்டுவார்கள்.

சந்திராஷ்டமம் - 29,30. 

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி நிறையும். எவரிடமும் வீண் பேச்சு வேண்டாம். 

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து நடப்பார்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் ரகசியங்களைப் பகிர வேண்டாம். விவசாயிகள் சந்தையில் நிலவும் போட்டிகளைச் சமாளிப்பார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வார்கள்.

பெண்கள் ஆன்மிகத்திலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுத்திக் கொள்வார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.
சந்திராஷ்டமம்} 31, 1.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் வெற்றி உண்டாகும். சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய திட்டங்களைத் தீட்டுவார்கள். விவசாயிகள் குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவார்கள்.

அரசியல்வாதிகளின் செயல்கள் மேலிடத்தின் கவனத்தை ஈர்க்கும்.  கலைத்துறையினர் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுவார்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் 2,3.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பயணங்கள் கைகூடும். தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்லும்.   பெரியோர்களின்ஆலோசனைகள் உந்து சக்தியாக அமையும்.  செல்வாக்கு 
அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பிரச்னைகளைச் சமாளிப்பார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சலைப் பெறுவார்கள்.

அரசியல்வாதிகள் போட்டிகளைச் சமாளிப்பார்கள். கலைத்துறையினர் எதிரிகளின் அலட்சியத்தைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். பெண்கள் யோகா, தியானத்தைக் கற்றுக் கொள்வார்கள். மாணவர்கள் பெற்றோரின் பேச்சை கேட்டு நடப்பார்கள்.

சந்திராஷ்டமம்- 4.

ADVERTISEMENT
ADVERTISEMENT