வெள்ளிமணி

சாத்தானை தோற்கடித்த யோபு!

DIN

யோபு என்னும் மிகப்பெரும் செல்வந்தர் மிகுந்த இறைப் பற்று உள்ளவராக வாழ்ந்து வந்தார். அவரிடம் ஆயிரமாயிரம் ஆடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள்; இவற்றை நிர்வகிக்க நூற்றுக்கணக்கில் வேலைக்காரர்கள் என எல்லா செல்வச்செழிப்பும் இருந்தது. 

அன்பான மனைவியும், பத்து பிள்ளைகளும் இருந்தனர். கடவுளிடம் மாறாத பக்தி கொண்டவர். தம் வாழ்வில் இறைவனுக்கே முதலிடம் என்று அர்ப்பணித்து வாழ்ந்து வந்தார். யோபுவின் மேல் சாத்தான் கண் வைத்தான். யோபுவின் தெய்வ நம்பிக்கையை எப்படியாகிலும் கெடுக்க வேண்டும் என்று வழிதேடினான். 

ஒரு நாள் தேவ சமூகத்தில் சாத்தான் வந்தான். ""ஏ! சாத்தானே! எங்கே இருந்து வருகிறாய்? என் தாசனாகிய யோபுவைக் கண்டாயோ? அவனைப் போல் பக்தியுள்ள மனிதர் உலகில் இல்லை!'' என்றார் கடவுள். 

சாத்தான் கடவுளைப் பார்த்து ""நான் பூலோகம் சுற்றி வருகிறேன். உன் தாசனாகிய யோபுவை அறிவேன். அவன் மேலுள்ள உமது கையை எடும். அவனும் உம்மேல் பக்தி இல்லாதவனாக ஆவான்!'' என்று கூறினான். 

யோபுவின் மேல் ஆதிக்கம் செலுத்த, கடவுள் சாத்தானுக்கு அதிகாரம் கொடுத்தார். சாத்தான் யோபுவின் மேல், தன் தீய கரத்தை வைத்தான். 

யோபுவின் பெரும் செல்வம், ஆடு மாடுகள், வேலைக்காரர்கள் யாவரையும் வேற்று நாட்டினர் கொண்டுபோய் விட்டனர். யோபுவின் பத்து பிள்ளைகளும் உணவு உண்ணும் வேலையில், வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் இறந்து போயினர். யோபுவுக்கு உச்சம் தலை முதல் உள்ளம் கால் வரை கொப்பளம் வந்து வெடித்து, சீழ் வடிந்தது. யோபுவுக்கு உடலில் தீராத எரிச்சல்  ஏற்பட்டது. 

அவனது கொடிய நிலைமையைக் கண்ட அவன் மனைவி "நீர் தேவனை தூஷித்து உமது உயிரை விடும்!'' என்றாள். நண்பர்களும் அப்படியே கூறினர். ஆனால், யோபுவோ தன் கொடிய துன்பத்திலும் தேவனைத் தூஷிக்காமல், தன்னை தாழ்த்தி இறைவனைப் புகழ்ந்தான். 

பெரும் துன்பத்தைக் கொடுத்து, யோபுவை வீழ்த்த நினைத்த சாத்தான் தோற்றுப்போனான் (யோபு 1: 1 } 10). கர்த்தர் யோபுவின் பக்தி கண்டு அவனோடு பேசினார். யோபுவின் துன்ப நிலையை மாற்றினார். யோபு சுகம் பெற்றான்; இழந்த செல்வம் திரும்பப் பெற்றான். யோபுவுக்கு மீண்டும் பத்து பிள்ளைகள் பிறந்தனர். யோபு இன்று இறைவனின் சாட்சியாய் போற்றப்படுகிறார்! 

-முனைவர் தே. பால் பிரேம்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT