வெள்ளிமணி

வருமானம் உயரப்போகுது இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்!

2nd Dec 2022 05:15 PM

ADVERTISEMENT

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழில்  லாபகரமாக இருக்கும்.  உடன்பிறந்தோரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். பெற்றோருக்கு உதவிகளைச் செய்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் படிப்படியான வளர்ச்சியைக் காண்பார்கள்.

வியாபாரிகள் கணிசமான வருமானத்தைக் காண்பார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கு அனைத்து வேலைகளும் குறித்த காலத்துக்குள் நடக்கும்.

ADVERTISEMENT

கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும்.  பெண்கள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பார்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் சிதறாமல் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

நடத்த முடியாமல் இருந்த காரியங்களை நடத்தத் தொடங்குவீர்கள்.  

நண்பர்கள் உதவிகளைச் செய்வார்கள். எதையும் எதிர்கொள்ளும் துணிவும் தைரியமும் உண்டாகும். சமூகத்தில் புகழ் உயரும். உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் இணக்கமாகப் பழகுவார்கள்.

வியாபாரிகளுக்கு கூட்டாளிகளின் உதவி கிடைக்கும்.  விவசாயிகள் கொள்முதலில் லாபம் உயரக் காண்பார்கள்.  அரசியல்வாதிகளின் தைரியமும் ஆற்றலும் கூடும்.

கலைத்துறையினர் பாராட்டுகளைப் பெறுவார்கள். பெண்கள் நவீன உபகரணங்களை வாங்குவார்கள். மாணவர்கள் பொறுப்புடன் நடப்பார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலில் இருந்த பிரச்னைகள் குறையும். முக்கிய பிரபலங்களின் தொடர்பு உண்டாகும். கீழ்பணிபுரிபவர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.  

எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு புகழ் உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல்-வாங்கல் நல்ல முறையில் இருக்கும்.

விவசாயிகளின் உழைப்புக்கு மதிப்பு உண்டாகும். அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கலைத்துறையினர் ஒப்பந்தங்களை செய்து முடிப்பீர்கள்.

பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். மாணவர்கள் ஆசிரியர்களிடம் நற்பெயரை எடுப்பார்கள்.
சந்திராஷ்டமம்} இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி நிறையும்.  உடனிருப்போரின் குறைகளைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள்.  ஆன்மிகத்தில் மனம் ஈடுபடும். பெயரும் புகழும் 
உயரத் தொடங்கும்.

உத்தியோகஸ்தர்கள் நேர்மறையாகச் சிந்தித்து வேலைகளைத் திட்டமிட்டு முடிப்பார்கள். வியாபாரிகள் வருமானம் உயரக் காண்பார்கள். விவசாயிகள் புதிய முறையில் விவசாயப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.  

அரசியல்வாதிகளுக்கு கடன் பிரச்னைகள் எதுவும் இருக்காது. பெண்கள் கணவருடன் ஒற்றுமையுடன் நடந்துகொள்வீர்கள்.  மாணவர்கள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும்.  வருமானம் உயரத் தொடங்கும். உறவினர்களால் ஆதாயம் நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.

உத்தியோகஸ்தர்களின் சொல்லுக்கு மதிப்புகூடும். வியாபாரிகள் கூட்டாளிகளை அனுசரித்து நடப்பார்கள்.

விவசாயிகள் பாதிப்பு எதுவும் நேராது. அரசியல்வாதிகள் கொடுக்கப்பட்ட வேலைகளைத் திட்டமிட்டு செய்து முடிப்பார்கள். கலைத்துறையினர் கௌரவத்தைவிட்டுக் கொடுக்காமல் பணியாற்றுவார்கள்.

பெண்கள் சாதுர்யமாக குடும்பத்தை நிர்வகிப்பார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேறுவார்கள்.
சந்திராஷ்டமம்} 2,3.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். உடல்திறனை மேம்படுத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் புதிய யுக்தியுடன் பணிகளைச் செய்து முடிப்பார்கள்.

வியாபாரிகள் பொறுமையுடன் வியாபாரத்தை செய்வார்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அளவு திருப்தியாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு போட்டியாளர்களின் தொல்லை இருக்காது. கலைத்துறையினருக்கு உழைப்பும் முயற்சியும் நன்மை பயக்கும்.  பெண்கள் பொருள் சேர்க்கையில் ஈடுபடுவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும்.

சந்திராஷ்டமம்} 4,5,6.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

தேகத்தில் மிடுக்கு கூடும். தொழில் உயரக் காண்பீர்கள். நண்பர்களிடம் இருந்த பிணக்குகள் தீரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். வியாபாரிகளுக்குப் பணியாள்களின் ஆதரவு கிடைக்கும். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க முற்படுவார்கள்.

அரசியல்வாதிகள் தெளிவாகச் செல்படுவார்கள். கலைத்துறையினர் உற்சாகமான மனநிலையுடன் பணியாற்றுவார்கள். பெண்கள் உறவினர்கள் சிலரின் உண்மைரூபத்தை அறிவார்கள். மாணவர்கள் பிறரின் பாராமுகத்தைப் பெரிதுபடுத்த மாட்டார்கள்.

சந்திராஷ்டமம்}7,8.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

வருமானம் படிப்படியாக உயரும். புதிய கடன்களை வாங்குவீர்கள். 
மனதில் நல்ல சிந்தனைகள் உதயமாகும். பிறருக்கு உதவிகளைச் செய்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் உழைப்புக்கேற்ற பலனை அனுபவிப்பீர்கள். வியாபாரிகளின் பிரச்னைகள் தீரும். விவசாயிகள் பால் வியாபாரத்தில் லாபம் காண்பார்கள்.

அரசியல்வாதிகளை கட்சி மேலிடம் பாராட்டும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவார்கள். பெண்கள்

கணவருடன் நல்ல முறையில் இருப்பார்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெற்று முன்னேறுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும்.  சொத்துகள் விஷயத்தில் திருப்பம் உண்டாகும்.  தீயவர்களின் நட்பை விலக்கி விடுவீர்கள்.  

குடும்பத்தில் ஒற்றுமை நீடிக்கும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடிச் செல்வார்கள்.

விவசாயிகள் சக விவசாயிகளிடம் நற்பெயரை எடுப்பார்கள். அரசியல்வாதிகள் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.  கலைத்துறையினர் பொறுமையுடன் இருப்பார்கள்.

பெண்கள் ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துவார்கள். மாணவர்கள் கல்வியால் மேன்மை பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புகமும் கௌரவமும் கூடும். கவலைகள் படிப்படியாகக் குறையும்.  உங்கள் பணிகளை நீங்களே செய்து முடிப்பீர்கள்.  மனதுக்கு இனிய பயணம் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பிறரிடம் சகஜமாகப் பழகுவார்கள். வியாபாரிகள் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.  

விவசாயிகளின் எதிர்ப்புகள் குறையும். அரசியல்வாதிகள் மாற்றுக்கட்சியினரிடம் கவனமாகப் பேசவும்.

கலைத்துறையினர் பொறுப்புடன் நடப்பார்கள்.  பெண்கள் தர்ம காரியங்களில் ஈடுபடு
வார்கள்.  மாணவர்கள் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்ப நலம், ஒற்றுமை மேலோங்கும். பணவரவு உண்டு. செய்தொழிலில் புதிய அனுபவம் கிடைக்கும்.  பின்விளைவுகளை ஆராய்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயரை எடுப்பார்கள். வியாபாரிகள் ஏற்றுமதி வாய்ப்புகளைத் தேடுவார்கள். விவசாயிகள் பழைய குத்தகை பாக்கிகளை அடைப்பார்கள்.

அரசியல்வாதிகள் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்கள். கலைத்துறையினரின் செல்வாக்கு அதிகரிக்கும். பெண்கள் குடும்பத்தில் சுற்றுலா செல்ல திட்டமிடுவார்கள். மாணவர்கள் நற்பெயரை எடுப்பார்கள்.


சந்திராஷ்டமம்} இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

அரசிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.  பொருளாதாரம் மேம்படும். புதிய முயற்சிகளைச் செம்மையாக நிறைவேற்றுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் இனிமையாகப் பேசி பழகுவார்கள். வியாபாரிகள் புதிய இடங்களுக்குப் பயணிப்பார்கள். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு வழக்குகளில் இருந்து விடுதலை கிடைக்கும். கலைத்துறையினர் ரசிகர்களுக்கு உதவி செய்வார்கள்.  பெண்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணி காப்பாற்றுவார்கள்.

மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவார்கள்.

சந்திராஷ்டமம்} இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT