வெள்ளிமணி

இந்த வாரத்தின் முக்கிய நிகழ்வுகள்...

5th Aug 2022 02:55 PM

ADVERTISEMENT

உழவாரப் பணி

சென்னை வேளச்சேரி திருக்கோயில் உழவாரப் பணி மன்றம் சார்பில், வண்ணாரப்பேட்டை துறைமுகப் பணியாளர் குடியிருப்புக்குள் அமைந்துள்ள அருள்மிகு பூமிநாயகி அம்மன் உடனுறை பூமிஸ்வரர் கோயிலில் உழவாரப் பணி ஆக. 7-இல் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.  
தொடர்புக்கு: 94451 21080.

குரு பூஜை விழா

சென்னை தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள  தருமபுர ஆதீன சமயப் பிரசார நிலையத்தில் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் குரு பூஜை (ஆடி சுவாதி) சிறப்பு திருமுறைபாராயணம், சொற்பொழிவு ஆகியன ஆக. 5-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகின்றன. 
தொடர்புக்கு: 9444887769.

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகேயுள்ள வெட்டுவாணம் ஸ்ரீஅறுபத்து மூவர் சமரச சன்மார்க்க சபை சார்பில், சுந்தரமூர்த்தி சுவாமிகள் குரு பூஜை விழா  ஆக. 5-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

சங்கீத சமர்ப்பணம்

வழூர் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் அறக்கட்டளை சார்பில், சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகளின் அருட் செயல்களைப் போற்றும் விதமாக சங்கீத சமர்ப்பணம் நிகழ்வும்,  ஆவணப்படம் திரையிடல் சமர்ப்பணமும் ஆக. 8-ஆம் தேதி (திங்கள்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றன. நிகழ்ச்சியில் ஸ்ரீமுரளீதர ஸ்வாமிஜி பங்கேற்க உள்ளார்.
தொடர்புக்கு: 98400 53289.


கூழ் ஊற்றும் திருவிழா

சென்னை செக்ரடரியேட் காலனி அருள்மிகு ஸ்ரீசுயம்பு லட்சுமி அம்மன் கோயிலில் கூழ் ஊற்றும் திருவிழா ஆக. 7-ஆம் தேதி காலை 8.30 முதல்  மாலை வரை நடைபெறுகிறது. 

ஆடித் தவசுத் திருவிழா

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா ஜூலை 31-இல் தொடங்கி, ஆக. 11 வரை நடைபெறுகிறது.  முக்கிய நிகழ்வுகள்:  ஆக. 8 -திருத்தேரோட்டம்,  10- ஆடித்தவசு.

ஸ்ரீசாஸ்தா ப்ரீதி

கல்லிடைக்குறிச்சி கரந்தையார் பாளையம் பிராமண மஹா சமூகத்தினர் ஸ்ரீசாஸ்தா ப்ரீதி பெரிய ஆடியந்திரம் புஷ்பாஞ்சலி நிகழ்வை ஆக. 12,13,14-ஆம் தேதிகளில் நடத்தவுள்ளனர்.  ஆக. 12- தர்ம சாஸ்தா ஸ்ரீகுளத்தூரிலய்யனுக்கு புஷ்பாஞ்சலி, 13- பெரிய ஆடியந்திரம் சாஸ்தா ப்ரீதி, 14- ஸ்ரீசூரியநாராயண பூஜை,  ஆதிவராஹப்பெருமாள் திருமஞ்சனம், கருடசேவை.
தகவல்களுக்கு: 95975 45765.

ஸ்ரீராதா மாதவ கல்யாண மகோத்ஸவம்

சென்னை பம்மல் ஸ்ரீசங்கரா நகர் ஸ்ரீசங்கர விநாயகர், ஸ்ரீசுந்தர ஆஞ்சனேயர் கோயிலில்,  சேரன்மகாதேவி பாலவெங்கட கிருஷ்ண பாகவதர் குழுவினரால் ஸ்ரீராதா மாதவ கல்யாண மகோத்ஸவம் பாகவத பத்ததியில் ஆக. 20,21-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. ஆக. 20 - திவ்ய நாம பஜனை, 21- கல்யாண உத்ஸவம்.
தொடர்புக்கு: 8939202164, 8610187352.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT