வெள்ளிமணி

குரு வம்சம்!

26th Nov 2021 06:47 PM | -ரவிவர்மா

ADVERTISEMENT

 

குருவானவர் நான்கு வகைப்படுவார். முதலாம் குரு - கல்வி கற்றுத் தருபவர். இரண்டாமவர் பரம குரு - இவர் ஒரு குறிப்பிட்ட தத்துவத்தைக் கொண்ட "குரு - சீட' மரபை நிலைநாட்டியவர். மூன்றாமவர் மகா குரு அல்லது பராபர குரு - பல்வேறு தத்துவங்களைக் கொண்ட குரு - சீட மரபுகள் தோன்றுவதற்கு ஆதாரமாக இருப்பவர் (உதாரணம் - வேத வியாசர். அத்வைதம், துவைதம் மற்றும் விசிஷ்டாத்துவைதம் போன்றவை தோன்றக் காரணமாக இருந்தவர்).

நான்காமவர் பரமேஷ்டி குரு- இவர் முக்தி வழங்கக்கூடிய மிக உயர்ந்த குரு (உதாரணம் - தட்சிணாமூர்த்தி). நான்கு வகை குருவும் உள்ள நாடு நமது நாடுதான்!

"குரு' என்றழைக்கப்பட்ட "குரு நாடு' தற்கால தில்லி, ஹரியாணா, உத்தரகண்ட் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகளை எல்லைகளாகக் கொண்டிருந்தது. குரு நாட்டை நிறுவிய அரசரே "குரு' ஆவார்.

ADVERTISEMENT

குரு நாட்டின் எல்லைகளாக கிழக்கில் திரெளபதி பிறந்த பாஞ்சாலமும், வட மேற்கில் சகுனி பிறந்த காந்தாரமும்,  தெற்கில் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த சூரசேனமும் அமைந்துள்ளது. 

சூரிய குல மன்னர்கள் "ரகு வம்சத்தினர்' என்றழைக்கப்படுவது போன்று, சந்திர குல மன்னர்கள் "குரு வம்சத்தினர்' என்றழைக்கப்படுகிறார்கள். அரசன் நகுசனின் வழிவந்த யயாதியின் கடைசி மகன் அரசன் புரு ஆவார். புருவிற்குப் பின் 25 தலைமுறைகளைக் கடந்து பிறந்தவர் அரசர் குரு. குருவிற்குப் பின் 15 தலைமுறைகளைக் கடந்து பிறந்தவர்கள் பாண்டவர்கள் மற்றும் கெளரவர்கள். 

அரசன் யயாதியின் மூத்த மகன் யதுவின் வழிவந்தவர்களே "யது குலத்தினர்' ஆவர். யது குலத்தின் உட்கிளையான "விருஷ்ணி குலத்தில்' பிறந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணன், சுபத்திரை மற்றும் பலராமன் ஆவர்.

குரு நாட்டின் தலைநகரமாக விளங்கியது அஸ்தினாபுரம். இந்நகரின் வளமான பெரும் பகுதிகளை திருதராஷ்ட்டிரனும் அவரின் பிள்ளைகளான கெளரவர்களும் ஆண்டனர். திருதராஷ்ட்டிரனின் தம்பி பாண்டுவின் பிள்ளைகளான பாண்டவர்கள், குரு நாட்டின் கிழக்குப் பகுதிகளைப் பிரித்துக் கொண்டு "இந்திரப்பிரஸ்தம்' என்ற நகரத்தை நிறுவி ஆண்டனர்.

வியாசரின் மகாபாரதத்தில் குரு நாட்டையும், அதன் மன்னர்களையும் குறித்து விவரமாக எழுதப்பட்டுள்ளது. குரு நாட்டை ஆண்ட தருமன், பரீட்சித்து, ஜனமேஜயன் போன்ற அரசர்களின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் விளக்கப்பட்டுள்ளது. குரு வம்சத்தினர் ஆண்ட இடம் "குருúக்ஷத்திரம்'. இங்கு மகாபாரதப் போர் நடைபெற்றதால் அது "குருúக்ஷத்திரப் போர்' என்றாயிற்று. குரு நாட்டின் வளர்ச்சி படிப்படியாக மங்கி, கி.மு. 500-இல் முற்றிலும் மறைந்ததாக வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

Tags : vellimani Guru Dynasty!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT