வெள்ளிமணி

செருக்கு அடையாதீர்!

DIN


"பாவம் செய்யாதீர்' என்று கூறும் 
வள்ளலார் "எந்தப் 
பாவமெல்லாம் செய்யக்
கூடாது' என்று பட்டியல் 
அளித்திருக்கிறார். 
அதைப் பார்க்கலாம்:  
நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதீர் 
நட்டாற்றில் கையை நழுவ விடாதீர் 
வலிய வழக்கிட்டு மானங் கெடுக்காதீர் 
வரவு போக்கொழிய வழி அடைக்காதீர்!
தானம் கொடுப்போரை தடுத்து நிற்காதீர் 
தருமம் பாராது தண்டம் செய்யாதீர் 
கலந்த சினேகிதரை கலகம் செய்யாதீர்
களவு செய்வோர்க்கு உளவு சொல்லாதீர்! 
மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதீர்
மண்ணோரம் பேசி வாழ்வை அழிக்காதீர்
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்ளாதீர் 
குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்க்காதீர்!
ஏழைகளின் வயிறு எரியச் செய்யாதீர் 
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதீர்
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்யாதீர் 
ஊன் சுவை உண்டு உடல் வளர்க்காதீர்! 
பொருளை இச்சித்து பொய் சொல்லாதீர் 
பொது மண்டபத்தைப் போய் இடிக்காதீர் 
ஆசை காட்டி மோசம் செய்யாதீர்
அன்பு உடையவருக்குத் துன்பம் செய்யாதீர்! 
வேலையிட்டு கூலி குறைக்காதீர்
வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்காதீர் 
பசித்தோர் முகத்தைப் பாராமல் இருக்காதீர் 
பகைகொண்டு அயலோர் பயிரை அழிக்காதீர்!
கோள் சொல்லி குடும்பம் கலைக்காதீர் 
கலங்கி ஒளிந்தவரை காட்டிக் கொடுக்காதீர்
கற்பழிந்தவளை கலந்து இருக்காதீர்
கணவன் வழி நிற்போரைக் கற்பழிக்காதீர்!
காவல் கொண்டிருந்த கன்னியை அழிக்காதீர்
கர்ப்பம் அழித்து களித்து இருக்காதீர்
கற்றவர் தம்மைக் கடு கடுக்காதீர் 
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைக்காதீர்!
குருவை வணங்கக் கூசி நிற்காதீர் 
குருவின் காணிக்கை கொடுக்க மறவாதீர் 
பறவையை கூண்டில் பதைக்க அடைக்காதீர் 
பெரியோர் பாட்டிற் பிழை சொல்லாதீர்! 
கல்லும் நெல்லும் கலந்து விற்காதீர்
தவம் செய்வோரைத் தாழ்வு சொல்லாதீர் 
ஆலயக் கதவை அடைத்து வைக்காதீர் 
சிவனடியாரைச் சீறி வையாதீர்! 
சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்யாதீர்
மாதா பிதாவை வைது நில்லாதீர் 
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதீர் 
தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடையாதீர்!

-ஆர். வி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருஇந்தளூா் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

SCROLL FOR NEXT