சிறுவர்மணி

உப்பு - எத்தனை வகை..!

ஆர்.கே. லிங்கேசன்


கடலில் இருந்து  கிடைக்கும் உப்பு ஒரு வகை.  இதுதவிர, பல வகைகளிலும் உப்பு தயாரிக்கப்படுகிறது.

தரை உப்புகள்:  

வட இந்தியாவில் பல பகுதிகளிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டி எடுத்து சேகரிப்பதாகும்.

கிணற்று உப்புகள்:

சில இடங்களில்  உப்பு நீர்க் கிணறுகள் தோண்டி உப்பைத் தயாரிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா , ஜெர்மனி போன்ற நாடுகளில் இத்தகைய உப்புநீர் கிணறு முறையில் உப்பு தயாரிக்கப்படுகிறது.

ஏரி உப்புகள்:

சில நாடுகளில் ஏரிகளில் இருந்தும் உப்பு எடுக்கப்படுகிறது.

ஹிமாலயன் உப்பு:

இந்த வகை உப்பு இளஞ்சிவப்பு இந்துப்புப் பாறை போலவும், படிகங்களாகவும், புவியின் மேற்பரப்பிலும், அதற்கடியிலும் உள்ளது. இந்தியாவில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் மண்டி என்ற இடத்தில் இந்துப்பு கிடைக்கிறது. இதையே சிறந்த உப்பாக ஆயுர்வேத நூல்கள் கூறுகின்றன.

ஆழ்துளை கிணற்றில் உப்பு:

ராஜஸ்தானில் ஜோத்பூர்-ஜெய்சல்மீர் செல்லும் பாதையில் பாலைவனத்தில் ஆழ்துளைக் கிணறு மூலம் உப்புநீர் வயல்களில் பாய்ச்சி, உப்பு தயாரிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT