சிறுவர்மணி

தெரியுமா?

ஆ. கோ​லப்​பன்

இந்திய காப்புரிமைச் சட்டம் 1957-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டவுடன், அந்தச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட முதல் புத்தகம் எது தெரியுமா? டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் எழுதிய சுயசரிதம்தான்.

இசைக்கருவிகளில் கடம் வித்தியாசமான கருவியாகும். உலகெங்கும் உள்ள கடம் வித்வான்கள் கூட மானாமதுரையில் இருந்தே கடம் வாங்கிச் செல்கின்றனர்.

பின்லாந்தில் டெனால்ட் டக் காமிக்ஸ் , படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அவர் டக் பேண்ட் அணியாததுதான் காரணம் என்று கூறிவிட்டனர்.

-நெ.இராமகிருஷ்ணன்

ஆக்டோபஸ்கள் மிகவும் ஆழமான கடல் பகுதிகளில் வாழ்வதற்கு ஏற்ப இரும்பு சத்து மிக்க ரத்தத்தைக் கொள்ளாமல்,  தாமிர சத்து மிக்க நீல நிற ரத்தத்தைக் கொண்டுள்ளது. தண்ணீரில் ஆக்ஸிஜன் இல்லாதபோதும், தண்ணீரின் டெம்பரேச்சர் மிகக் குறைவாக இருக்கும்போதும் இந்த தாமிரச் சத்து ரத்தம்தான் உதவுகிறது.

துருவக் கரடிகள் ஒரு ஐஸ் தீவிலிருந்து மற்றொரு ஐஸ் தீவை அடைய மணிக்கு 9 கி.மீ. வேகத்தில் பல மைல்கள் நீந்தக் கூடியவை. இதற்காக இவை தனது நீண்ட விரல்களையும் பின்னங்கால்களையும் துடுப்பு போலவும் பயன்படுத்துகின்றன. ஆண் துருவக் கரடிகள் 800 கிலோ எடை கூட இருக்கும்.  பெண் கரடிகள் இதில் பாதியளவு எடையே இருக்கும். இவை 3 மீட்டர் நீளம் வளரக் கூடியவை. கரடி வகையில் இவைதான் மிகப் பெரியவை.

-சம்பத் குமாரி

ஜெஸ்டர் கால்சன் என்ற  அமெரிக்க சட்டக் கல்லூரி மாணவர்தான் எலக்ட் ரோஸ்டாடிக் எனர்ஜி முறையில் பத்திரங்களைப் பதிவு செய்யும் முறையைக் கண்டுபிடித்தார்.  ஆனால், அந்தக் கருவியை எந்த நிறுவனமும் வாங்கவோ, உற்பத்தி செய்யவோ முன்வரவில்லை.  இறுதியாக, ஹலாய் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம்தான் அந்தத் தொழில் நுணுக்கத்தை வாங்கியது. பின்னர், இந்த நிறுவனத்துக்கு ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் என்று பெயர் மாறியது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான் ஜெராக்ஸ் கருவி. 1950-ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT