சிறுவர்மணி

சமாதானத்தின் அடையாளம் புறா

22nd Jan 2023 06:00 AM | பவன்

ADVERTISEMENT

 

சமாதானம், அமைதியின் சின்னமாக, அடையாளமாகப் புறா கருதப்படுகிறது. இதன் பின்னணியில் பைபிள் காலத்து நிகழ்வு உள்ளது. இறைத்தூதர் நோவா காலத்தில், மிகப் பெரிய மழை, வெள்ளம் மூலம் உலகம் அழிக்கப்பட்டது.  

அப்போது, இறைவனின் கட்டளைப்படி பெரிய கப்பல் செய்து, அதில் தன்னைப் பின்பற்றியவர்கள் மற்றும், ஜோடிகளாக விலங்குகளை நோவா ஆற்றிக் கொண்டார். 

நீண்ட பயணத்துக்குப் பின்னர்,  அருகே கரைப்பகுதி உள்ளதா? என்பதை அறிய புறா ஒன்றை நோவா பறக்கவிட்டார்.  கப்பலில் இருந்து சென்ற புறா அருகே கரை இருக்கும் இடத்துக்குச் சென்று ஒரு ஆலிவ் இலையை தனது அலகில் கொத்தியபடி வந்தது. அந்தப் புறாவின் வடிவத்தில் இறைவன் தங்களுக்கு வழிகாட்டியதாக நோவா கருதினார். இதையடுத்து,  புறா சமாதானத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT