சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

26th Jun 2022 06:00 AM | ரொசிட்டா

ADVERTISEMENT

 

வானவில்லில் ஏழு வண்ணங்கள் உள்ளன. இந்த ஏழு வண்ணங்களும் ஒரே வரிசையில்  ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று அமைந்திருப்பதற்குக் காரணம் என்ன? இதில் மாற்றம் நிகழ வாய்ப்பு உண்டா?
மாற்றம் நிகழ வாய்ப்பே இல்லை. சூரியனின் ஒளிக் கதிர்கள் மழைத்துளிகளின் மீது பட்டுப் பிரதிபலிப்பதால் இந்த வர்ணஜாலம் நிகழ்கிறது. இதற்கு SPECTRUM என்று பெயர். இந்த SPECTRUM ~ ஒரு குறிப்பிட்ட அமைப்பில்தான் அமையும். அது என்றும் மாறாத இயற்கையின் அதிசயம்.  இது ஏன் இந்த வரிசையில் அமைகிறது என்பதைக் கண்டுபிடிக்க முயன்று பலரும் தோற்றுப் போயிருக்கிறார்கள். கூடுதலாக ஒரு தகவல். வானவில்லின் வர்ணங்களின் வரிசையை எளிதில் மனதில் பதிய வைப்பதற்கு  VIBGYOR என்று ஒரு சொல்லை உருவாக்கினார்கள். இதன்படி ஊதாவில் ஆரம்பித்து சிவப்பில் முடியும். ஆனால் வானவில் முதலில் சிவப்பில் ஆரம்பித்து ஊதாவில்தான் முடிகிறது. இதை ஞாபகம் வைத்துக்கொள்ள  ROYGBIV என்ற சொல்லை பயன்

படுத்தவதுதான் சரி என்கிறார்கள். அடுத்த முறை வானவில்லைப் பார்க்க நேரிடும்போது நன்றாகக் கவனியுங்கள். மேலே முதலில் சிவப்பு நிறம் என்று ஆரம்பித்து இறுதியில் ஊதா என்று முடியும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT