சிறுவர்மணி

நிலவில் பாட்டி வடை சுடுவாரா?

4th Dec 2022 06:00 AM | தி.நந்தகுமார்

ADVERTISEMENT

 

"நிலா நிலா ஓடி வா..!'',  ""நிலாவைக் கேட்டா பிடிச்சுத் தருவேன்'', ""நிலாவில் பாட்டி வடை சுடுறாங்க''.... என்றெல்லாம் நிலவைப் பற்றி, பாட்டிகள் குட்டீஸ்களுக்கு கதை சொல்வதுண்டு. ஆனால், நிலவில் வாழ முடியுமா? என்று நாசாவும், உலகின் பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது மனிதர்கள் வாழ சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்கிறது நாசா.  அப்போ, பாட்டி சொன்னது உண்மைதானா?

சரி விஷயத்துக்கு வருவோம். ஆராய்ச்சி பற்றிய தகவல்கள்:

1969-ஆம் ஆண்டில் முதல்முறையாக மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது அமெரிக்கா.  அந்தச் சாதனையை செய்த பின்னர், தற்போது அதற்கான முயற்சியில் மீண்டும் ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

இதற்காக "'ஆர்டெமிஸ்'' என்ற திட்டம் அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமாக நாசா சார்பில் தயாராகி வருகிறது.  2025-க்குள் மனிதர்களை அனுப்ப முயற்சி நடக்கிறது.

இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலத்தின் சோதனை முயற்சி மனித மாதிரிகளுடன் என்.எஸ்.எஸ். ராக்கெட் மூலம் நிலவுக்கு அண்மையில் அனுப்பப்பட்டு, வெற்றியும் கிடைத்தது.

இதுகுறித்து ஓரியன் திட்டத் தலைவர் ஹோவர்ட் ஹூ கூறுகையில், """"2030-ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம்.  மனிதர்களை நிலவில் அனுப்பப் போகிறோம். அவர்கள் வாழ்ந்து ஆராய்ச்சி செய்ய போகின்றனர்.  இது நாசாவுக்கு மட்டுமல்ல; விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் அனைவருக்கும் சிறந்த நாள்'' என்றார்.

அப்போ விரைவில் நிலவில் பாட்டி வடை சுடப் போவது உண்மைதான்!

ADVERTISEMENT
ADVERTISEMENT