சிறுவர்மணி

கடி

தினமணி

""சர்வர்... சாப்பாடு போட்டுட்டு ஏன் அவரை டேபுள்ல முட்டவைச்சீங்க?''
""அவர்தான் சாப்பாட்டில் முட்ட வையுங்கனு சொன்னார்?''

இர.கிருத்திக்குமார்,
நெய்வேலி- 607 803.

""காலைல என்னடா சாப்பிட்ட...?''
""எங்க அம்மா தோசை சுட்டுத் தந்தாங்கடா...''
""அது எப்படிடா... எங்க அம்மா மாவைத்தான் தோசையா சுட்டுத் தருவாங்க''

நாஞ்சில் சு. நாகராஜன், 
பறக்கை. 

""பெரியவங்க கிட்ட எதைக் கேட்டாலும் மரியாதையா கேக்கணும்டா கண்ணு!''
""சரிப்பா, எனக்கு மரியாதையா செல்போன் வாங்கிக்கொடு''

சி. ஆர். ஹரிஹரன், 
ஆலுவா, கேரளா.

""என்னங்க... அந்த டாக்டர் போற வர்றவங்க எல்லாரையும் உத்து உத்துப் பாக்கறாரு?''
""நான்தான் சொன்னேனே... இந்த ஏரியாவிலேயே அந்த டாக்டர்தான் "நல்லா  பாப்பாரு'ன்னு...''

டீ.என்.பாலகிருஷ்ணன், 
சென்னை .

""கவிதை சொல்லச் சொன்னால் எதுக்கு ஒரே வார்த்தையை மூனு தடவ சொல்றே...?''
""இது ஏலக் கவிதை சார்...''

ஏ. நாகராஜன், 
பம்மல்.

""எதுக்கு வாயை இழுத்து வச்சு கட்டியிருக்கீங்க?''
""உடம்பு வெயிட் போடுதுன்னு சொன்னதுக்கு டாக்டர்தான் வாயைக் கட்டச் சொன்னார்!''

வி. பிரதீப்,
இந்திரா நகர், நெய்வேலி - 607801.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT