சிறுவர்மணி

கடி

18th Sep 2021 06:00 AM

ADVERTISEMENT

 


""எங்கண்ணா டேபிள் டென்னிஸ்லே கில்லி!''
""எங்கண்ணா கில்லியிலே கில்லி!''

கோ . ராஜசேகர்,
தருமபுரி.

 

ADVERTISEMENT

""அ, ஒண்ணு,.... வ, ரெண்டு,.... ன், மூணு,..... கோ, நாலு,..... வி,....அஞ்சு,.... லு, ஆறு,.... க், ஏழு,..... கு, எட்டு,....'''
""நிறுத்துடா!..... என்ன இப்படிப் படிக்கிறே?''
""நீங்கதானே எழுத்துக்கூட்டிப் படிக்கச் சொன்னீங்க!.....''

கோ . சாய்லட்சுமி, 
திருநெல்வேலி - 627011.

 

 

""ஐயப்பன் கோயிலுக்கு போற நீங்க இவ்வளவு சின்ன பையனை குருசாமின்னு சொல்றீங்களே?''
""இவன் பேரு குருசாமிங்க!''

மு . பெரியசாமி,
விட்டுக்கட்டி.

 

 

 ""என்னப்பா இது எதுக்கு என்  பாக்கெட்டுலே பிளாஸ்க் மணியைப் போடறீங்க?''
""நீதானே பாக்கெட் மணி கேட்டே?'''

ஆர் . மகாதேவன்,
திருநெல்வேலி டவுன்.

 

""எதுக்குடா மூக்குக்கண்ணாடியை ஃபிரிட்ஜிலே வெக்கறே?''
""நீதானேக்கா கூலிங்கிளாஸ் கேட்டே! கொஞ்சம் வெயிட் பண்ணு! கூலாகட்டும்!''

கோ . வினோத்,
கிருஷ்ணாபுரம் - 627011.


""எனக்கு நாலு மொழி தெரியும்!''
""ஆச்சரியமா இருக்கே?... இந்தச் சின்ன வயசிலேயா?''
""எதிர் வீட்டு தேன் மொழி, பக்கத்து வீட்டுக் கனிமொழி,.... மாடி வீட்டு மணிமொழி,.... அடுத்த வீட்டு அருள்மொழி 
அங்கிள்!''

கே . இந்து குமரப்பன்,
விழுப்புரம் - 605602. 
 

Tags : siruvaramni Bite
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT