சிறுவர்மணி

அபூர்வ அப்பம்!

16th Oct 2021 06:00 AM | தளவை இளங்குமரன்

ADVERTISEMENT

 

அரிசிமாவை அரைத்தெடுத்து 
அடுப்பு மூட்டி நெருப்பெரித்து 
ஆச்சி சுட்டு எடுத்திடாத அப்பம் - கைக்குள் 
அடக்கியாரும் பிடித்திடாத அப்பம்!

விரும்பும்போது நடைபிடித்து 
வீதியோரக் கடைபிடித்து 
விலைக்கு வாங்கக் கிடைத்திடாத அப்பம்! - வைக்கும் 
விருந்திலேயும் படைத்திடாத அப்பம்!

எறும்பு கூடி அரித்தெடுத்து 
எலிகள் தேடிக் கொறித்தெடுத்து 
இறைத்திடாமல் குறைந்து போகும் அப்பம் ! - முற்றும் 
இயற்கையாக மறைந்துபோகும் அப்பம்!

ADVERTISEMENT

திரும்ப வானில் பிறப்பெடுத்து 
தீப ஒளிப் பெருக்கெடுத்து 
தினம் இரவில் வளரும் உலா அப்பம்! - நெற்றித் 
திலகவட்ட வடிவ நிலா அப்பம்!

Tags : siruvarmani Pinch hand paint!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT