சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

24th Jul 2021 08:14 PM | -ரொசிட்டா

ADVERTISEMENT

 

கேள்வி: தெருவில் மின்சாரக் கம்பிகளில் ஹாயாக அமர்ந்திருக்கும் காக்கை குருவிகளுக்கு ஷாக் அடிக்காதா? ஏன்?

பதில்: பொதுவாக மின்சாரம் ஒருவரது அல்லது ஏதாவது ஒரு பொருளின் மீது பாய்ந்து நாசம் விளைவிக்க வேண்டுமென்றால் அந்த மனிதர் அல்லது அந்தப் பொருள் நல்ல மின்கடத்தி (conductor) ஆக இருக்க வேண்டியது அவசியம்.

அப்போதுதான் அங்கு மின்சாரம் பாய்ந்து ஆபத்தை உண்டாக்கும். ஆனால், பறவைகள் நல்ல மின்கடத்தி அல்ல. 

ADVERTISEMENT

அவற்றின் உடலில் செல்களும் தசைகளும் மிகமிக மென்மையாக இருப்பதே இதற்குக் காரணம்.  இதனால் கம்பிகளின் மேல் உட்கார்ந்திருக்கும் பறவையைக் கண்டுகொள்ளாமல் மின்சாரம் ஓடிக்கொண்டிருக்கும்.

இதனால்தான் பறவைகள் எவ்வளவு நேரம் மின்சாரக் கம்பிகளில் உட்கார்ந்திருந்தாலும் அவற்றுக்கு ஷாக் அடிப்பதில்லை.

ஆனால், அதே சமயத்தில் பறவைகள் வேறு ஏதாவது மின்கடத்திகளைத் தங்களுடன் சுமந்துகொண்டு வந்து மின்சாரக் கம்பிகளில் அமர்ந்தால்  நிச்சயமாக ஷாக் அடிக்கும்.  ஏனென்றால் அந்தப் பொருள்கள் ஒருவேளை நல்ல மின்கடத்தியாக இருக்கக்கூடும்.

Tags : Siruvarmani Uncle Antenna
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT