சிறுவர்மணி

சேமிப்பு!

24th Jul 2021 09:02 PM | கடலூர் . நா . இராதாகிருட்டிணன்

ADVERTISEMENT


சிறுகச் சிறுகச் சேமித்தால் 
சேர்ந்திடும் இன்பம் வாழ்வினிலே!
எறும்பு கூட சேமிப்பை
எடுத்துச் சொல்லும் நமக்கிங்கே!

அனலும் புனலும் தந்திடுமே 
அளவில்லாத மின்சாரம்!
இனிதே அதனைச் சேமித்தால்
இல்லை நமக்குச் சேதாரம்!

நீரே வாழ்வின் ஆதாரம் - அதை 
நினைவில் கொணடு சேமித்தால்
ஏர்த்தொழில் தந்திடும் ஆதாயம்!
இன்பம் வாழ்வில் நிலையாகும்!

எரிபொருள் தன்னைச் சேமித்தால் 
எண்ணிலாப் பயன்கள் விளைந்திடுமே!
சரியும், தவறும் நம் கையில்
சிந்தனை செலுத்துவோம் சேமிப்பில்!

ADVERTISEMENT

கட்டுப்பாடுடன் செலவிட்டால் 
தட்டுப்பாடுகள் கிடயாது!
கிட்டும் இன்பம் பெரிதாகும்
கவலை என்பது அரிதாகும்!
 

Tags : Siruvarmani Save!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT