சிறுவர்மணி

மாய ஜாலக் கண்ணாடி!

17th Jul 2021 06:00 AM | அழகு . இராமானுஜன்

ADVERTISEMENT

 

கடையில் அப்பா வாங்கிவந்த 
கவர்ச்சி மிக்கக் கண்ணாடி 
சுவரில் மாட்டித் தொங்கிடும்!
உடைந்திடாமல் பார்த்துக் கொள்!

எதிரே சென்று எவர் நின்றாலும் 
அவரின் முகத்தக் காட்டிடும்!
அதிசயத்தைத் தினமும் செய்யும் 
அருமையான கண்ணாடி!

பெற்ற அம்மா காட்ட முடியா 
எனது முகத்தைக் காட்டிடும்!
உற்ற தோழன் கண்ணாடியே 
உரக்கச் சொல்வேன் நண்பனே!

ADVERTISEMENT

நீயும் வந்து உனது முகதச்தை 
அதிலே பார்த்து மகிழ்ந்திடு!
மாய ஜாலக் கண்ணாடியை 
மண்டியிட்டு வணங்கிடு!

Tags : Siruvarmani Magic Glass!
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT