சிறுவர்மணி

இளம் படைப்பாளி!: யானையின் நண்பன் யார்?

DIN

காட்டில் ஒரு யானை இருந்தது. அந்த யானைக்கு நண்பர்கள் யாருமே இல்லை! அது ஒரு நண்பரைக் கண்டுபிடிக்க நினைத்தது. வழியில் ஒரு முயலைப் பார்த்தது.

முயலிடம், ""நீங்க என் நண்பனாக இருக்க முடியுமா?'' என்று கேட்டது.

அதற்கு முயல், ""நான் உங்கள் நண்பனாக இருக்க விரும்புகிறேன்.... ஆனால்,... உங்களாலே, என்னைப் போலக் குதிக்கவோ, ஓடவோ முடியாது!.... அதனாலே என்னால் உங்க நண்பனாக இருக்க முடியாது!'' என்றது.

யானை மற்றொரு நண்பரைத் தேடிச் சென்றது. அப்போது வழியில் பார்த்த ஒரு குரங்கிடம், ""நீங்க என் நண்பராக இருக்க முடியுமா? ''என்று கேட்டது.

""நான் உங்கள் நண்பனாக இருக்க விரும்புகிறேன்!.... ஆனால் நீங்கள் என்னைப் போல மரம் ஏற முடியாது.... அதனால் என்னால் உங்கள் நண்பனாக இருக்க முடியாது!'' என்றது குரங்கு.

ஸ்ரீநிதி பிரபாகர்

யானை மிகவும் வருத்தத்துடன் சென்றது. நீண்ட தூரம் நடந்ததால் அதற்கு தாகமாக இருந்தது. அதனால் தண்ணீர் குடிப்பதற்காக கிராமத்திற்கு அருகிலிருந்த ஏரிக்குச் சென்றது. அங்கு யானை தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தபோது கிராம மக்கள் உற்சாகத்துடன் யானையைப் பார்ப்பதற்கு ஏரிக்கு வந்தனர். யானை கிராம மக்கள் அனைவரையும் பார்த்து, ""நீங்கள் என் நண்பர்களாக இருக்க முடியுமா?'' என்று கேட்டது.

கிராம மக்கள் அனைவரும் உற்சாகத்துடன், ""ஆமாம்!.... நாங்கள் அனைவரும் உன் நண்பர்களாக இருக்க ஆசைப்படுகிறோம் '' என்றனர்.

பின்னர் கிராம வாசிகள் யானைக்கு நண்பர்களாயினர். யானை சந்தோஷத்துடன் குதித்தது!

அடுத்த நாள் யானை வழியில் முயலைப் பார்த்தது. முயலும் குரங்கும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன.

""நீங்கள் ஏன் இவ்வளவு வேகமாக ஓடுகிறீர்கள்?'' என்று யானை கேட்டது.
அதற்கு அவை, ""சிங்கம் எங்களைத் துரத்துகிறது!... தயவு செய்து எங்களைக் காப்பாற்று!'' என்று யானையிடம் உதவி கேட்டன.

யானை சிங்கத்திடம் சென்று, ""நீ காட்டில் உள்ள எல்லா விலங்குகளையும் துன்புறுத்துகிறாய்!... இப்படியே தொடர்ந்தால் இந்தக் காட்டில் எந்த விலங்குகளும் இருக்காது!.... '' என்று சொன்னது.

உருவத்தில் மிகப் பெரியதான யானையைப் பார்த்த சிங்கம் பயந்துவிட்டது! சிங்கம் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கிருந்து சென்றது.
இப்போது முயல் மற்றும் குரங்கு யானையைப் பார்த்து, ""நீங்கள் எங்கள் நண்பனாக இருக்க முடியுமா?'' என்று கேட்டன.

யானை மகிழ்ச்சியுடன், ""நான் உங்கள் நண்பனாக இருப்பேன்!'' என்றது.
இப்போது யானை, குரங்கு, முயல் மற்றும் கிராமவாசிகள் அனைவரும் நண்பர்களாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.

நீதி : பெரியவர்களோ, சிறியவர்களோ எல்லோரிடமும் நண்பர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லோரும் ஒவ்வொரு வகையிலும் உதவ முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT