சிறுவர்மணி

பொன்மொழிகள்

16th Jan 2021 12:00 AM | சஜி பிரபு மாறச்சன், சரவணந்தேரி.

ADVERTISEMENT

குறைவாகப் பேசுவதனால் நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பெருகும்.  
-  ஏ .வி . ப்யூரென்

நாம் நமது செயல்களைத் தீர்மானிக்கிறோம். நமது செயல்களால் நம்மைப் பிறர் தீர்மானிக்கின்றனர்.  
-  ஜார்ஜ் எலியட்

தெரிந்த விஷயங்களை மட்டுமே பேசினால், உலகில் பூரண அமைதி ஏற்படும். 
 -  லியோ டால்ஸ்டாய்

அளவுக்கு மீறி அநியாயமாகச் சம்பாதிப்பவன், திருடர்களை உருவாக்குகிறான்.
- லாட்சு

ADVERTISEMENT

உண்மையுடன் உழைக்கவேண்டும் என்கிற ஆவலைத் தூண்டுவதே கல்வியின் முக்கிய நோக்கம்.  
-  கிளார்க்

அன்பு நிறைந்த இன்சொல் இரும்புக் கதவைக் கூடத் திறக்கும். 
 - ஜான் கீட்ஸ்

உயர்ந்த தவம் பொறுமை! உயர்ந்த ஆயுதம் மன்னிப்பு! உயர்ந்த மகிழ்ச்சி திருப்தி! 
- குருநானக்

ஆசையை வென்றவன் மகிழ்ச்சியுடன், சாந்தியுடன் உலகை ஆளும் ஆற்றல் பெற்றவனாவான். 
- பர்த்ருஹரி

உண்மையாக நடந்துகொள்ளும் மனிதனுக்கு உபதேசமே தேவையில்லை. 
 -  மகாவீரர்.

Tags : சிறுவர்மணி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT