சிறுவர்மணி

உழவே தலை!

6th Feb 2021 06:00 AM | -தளவை இளங்குமரன்

ADVERTISEMENT


காரிருள் களைந்திடக் 
கதிரவன் இருக்கு!
கழனியை உழுதிடக் 
கலப்பையும் இருக்கு!

ஏரினை இழுத்திட 
எருதுகள் இருக்கு!
இணைத்ததைச் செலுத்திட 
இருகரம் இருக்கு!

மாரியைப் பொழிந்திட 
மழைமுகில் இருக்கு!
மண்ணிடை விதைத்திட 
மணிவிதை இருக்கு!

வேருடன் களைகளும் 
விடைபெற இருக்கு!
விளைந்தபின் அறுவடை 
வேலையும் இருக்கு!

ADVERTISEMENT

பாரினை வருத்திடும் 
பசிப்பிணி இருக்கு!
பசிப்பிணி துரத்திடப் 
பயிர்த்தொழில் இருக்கு!

ஊருல குயிர்க்கு 
உணவிடும் அதற்கு 
"உழை தலை' யெனும் 
உயர்புகழ் இருக்கு!

ADVERTISEMENT
ADVERTISEMENT