சிறுவர்மணி

நினைவுச் சுடர்!: சிறுமியிடம் பாடம் கற்றேன்!

மாயூரன்

அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டின் அமெரிக்காவில் பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் அது. தன் வீட்டின் அருகில் வசிக்கும் மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை ஒரு நாள் அவர் சந்தித்தார். அப்போது அந்தச் சிறுமி, "தனக்கு, கணக்குப் பாடம் மிகவும் கடினமாக  இருப்பதாகவும்,  வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஒருமணி நேரம் தனக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும்படியும் கேட்டாள்.

ஐன்ஸ்டினும் அதற்கு சம்மதித்தார். அந்தச் சிறுமிக்கு  மூன்று மாதங்கள் கணிதம் சொல்லிக் கொடுத்தார். அதன் பயனாக அச்சிறுமி கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றது மட்டுமல்ல, கணிதத்தை நேசித்துப் படிக்கவும் தொடங்கிவிட்டாள். இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த அச்சிறுமியின் பெற்றோர், ஆல்பர்ட் ஐன்ஸ்டினுக்கு நன்றியைத் தெரிவித்தனர்.

அப்போது ஐன்ஸ்டின் அவர்களைப் பார்த்து, ""நான் அவளுக்குப் பாடம் கற்றுக் கொடுத்ததைவிட இந்த மூன்று மாதங்களில் உங்கள் மகளிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள்தான் ஏராளம்.  அதனால், நான்தான் உங்கள் மகளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

SCROLL FOR NEXT