சிறுவர்மணி

பொன்மொழிகள்

10th Apr 2021 06:00 AM

ADVERTISEMENT

 

"வாழ்க வளமுடன்' என ஒருவரை வாழ்த்தினால் பலவீனம் நீங்கி வளர்ச்சிக்கான கதவு திறக்கும். 
- வேதாத்திரி மகரிஷி

புன்முறுவல் காட்டவும், அன்போடு பேசவும்கூட நேரமில்லாதது போல் நடக்க வேண்டாம்.   
- வேதாத்திரி மகரிஷி

உண்மை எது?..., பொய் எது?.....,  என்பது தெரியாமல் வதந்திகளைப் பரப்பக்கூடாது. 
- வேதாத்திரி மகரிஷி

ADVERTISEMENT

மனதாலும் பிறர்க்குத் தீங்கி ழைக்கக் கூடாது. விளையாட்டாகக்கூடப் பொய் சொல்லக்கூடாது. 
- ஜெயேந்திரர்

நான் அடிமையாக இருக்க மாட்டேன். ஆகவே நான் எஜமானனாகவும் இருக்க மாட்டேன். இதுதான் ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம். 
- ஆபிரஹாம் லிங்கன்.

கடந்து போன நிமிடத்தை விலைக்கு வாங்கி அனுபவிக்க முடிகிற அளவிற்கு இந்த உலகில் யாரும் பணக்காரர்கள் இல்லை. 
- ஆஸ்கார் ஒயில்ட்

பூக்களின் வாயிலாக பூமி சிரிக்கிறது. 
- எமர்சன்

வெளிச்சத்தைப் பார்த்தபடி நில். நிழல் பின்னுக்குப் போகும். 
- வால்ட் விட்மென்

கைக்கு அருகில் உள்ள முதல் கடமையை ஆற்றுங்கள். அடுத்த கடமை என்ன என்பது தன்னாலே புலப்படும். 
- தாமஸ் கார்லைல்

குற்றத்தைத் தேடிக்கொண்டிருக்கிற மனம் மாசடைந்துகொண்டே இருக்கிறது. 
- எமர்சன்

Tags : பொன்மொழிகள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT