சிறுவர்மணி

அங்கிள் ஆன்டெனா

5th Dec 2020 06:18 PM | -ரொசிட்டா

ADVERTISEMENT


சில நாட்கள் தண்ணீருக்குள் கிடந்தால் எந்தப் பொருளும் அழுகிப் போய் விடு
கிறது. ஆனால் நீர்த் தாவரங்கள் காலம் முழுவதும் நீரில் கிடந்தாலும் அழுகிப் போவதில்லையே, ஏன்?

பதில்: நீருக்குள் விழும் பொருட்கள் பலவும் இறந்து போனவை அதாவது 
ஏற்கெனவே தனது உயிர் செல்களை 
இழந்தவை. உயிரற்றவை சீக்கிரம் அழுகித்தான் போகும்.
ஆனாலும் எல்லாப் பொருட்களும் இந்த முறையில் 
அழுகிப் போவதில்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு 
விதமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.
தங்கள் ஆயுள்காலம் முழுவதும் நீரில் வாழும் தாவரங்கள் முதலில் உயிர்ப்புடன் இருக்கின்றன. இதே தாவரங்கள் தங்களது உயிரை இழந்தவுடன் அழுகித்தான் போகும்.
பொதுவாகவே நீர்த்தாவரங்களின் மேல் பகுதியில் க்யூட்டிக்கில் (ஸ்ரீன்ற்ண்ஸ்ரீப்ங்) என்ற மென்மையான ஆனால் 
உறுதியான தோல் பகுதி ஒன்று இருக்கிறது. இந்த தோல் 
பகுதிதான் கர்ணணுக்கு கவசம் போல இந்தத் தாவரங்களுக்கும் 
கவசம். இது அவ்வளவு எளிதில் தேவைக்கதிகமான நீரை 
உடலுக்குள் செலுத்தாது. இதனால்தான் நீர்த்தாவரங்கள் அழுகாமல் அழகாக நீரில் காட்சியளிக்கின்றன, வாழ்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT