மகளிர்மணி

பலாப்பழப் புளிகறி

ஆர். ஜெயலட்சுமி

தேவையானவை:

பலாப்பழம் 200 கிராம்
புளி 25 கிராம்
வெல்லம் 25 கிராம்
மஞ்சள் பொடி கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் அரை தேக்கரண்டி
பச்சரிசி 50 கிராம்
வெந்தயம் 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் 8
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை 1 பிடி
உப்பு,  எண்ணெய் தேவையான அளவு

செய்முறை: 

புளியை தண்ணீர்விட்டு கரைத்து பலாப்பழம், வெல்லம், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வேக வையுங்கள். அடிக்கடி நன்றாகக் கிளறி விடுங்கள். பச்சரிசி, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பொடித்து கலவையில் போட்டு கொதிக்க வைத்து, கீழே இறக்க வேண்டும்.  வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுத் தாளித்து கலவையில் சேர்த்தால் சுவையான பலாப்பழப் புளிகறி தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT