மகளிர்மணி

புர்ஜி புலாவ் கோவரி

22nd Jan 2023 06:00 AM | ந.கிருஷ்ணவேணி

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

உதிரியான பாசுமதி சாதம்- 1 கிண்ணம்
எண்ணெய்- 5 மேசைக் கரண்டி
ஏலக்காய், கிராம்பு- 2
பட்டை- சிறு துண்டு
பொடியாக அரித்த வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காலிஃபிளவர்- தலா கால் கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
சதுரங்களாக அரிந்த பனீர்- அரை கிண்ணம்
இஞ்சி, பூண்டு விழுது- 1 மேசைக் கரண்டி
மிளகாய்த் தூள், கரம் மசாலா- தலா 2 மேசைக் கரண்டி

செய்முறை:

ADVERTISEMENT

வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், காலிஃபிளவர், இஞ்சி, பூண்டு விழுது, பனீர், மிளகாய்த் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியன சேர்த்து நன்கு வதக்கவும், உதிரியான சாதம் சேர்த்து கலந்து, சூடாகப் பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT