மகளிர்மணி

பாதாம் புலாவ் (காஷ்மீர்)

22nd Jan 2023 06:00 AM | ந.கிருஷ்ணவேணி

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்:

பாசுமதி அரிசி- 1 கிண்ணம்
பாதாம்- 1 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
பச்சை பட்டாணி- கால் கிண்ணம்
குங்குமப்பூ- சிட்டிகை
பச்சை மிளகாய்- 4
வெண்ணெய்- 4 மேசைக்கரண்டி


செய்முறை: 

ADVERTISEMENT


10 பாதாம் எடுத்து, தோல் எடுத்து சீவி வைக்கவும். மீதமுள்ள பாதாமை ஊறவைத்து, தோல் எடுத்து 2 கிண்ணம் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் வழுவழுவென அரைக்கவும். ப்ரெஷர் பேனில் வெண்ணெய், பட்டாணி, நீளவாக்கில் அரிந்த பச்சை மிளகாய், உப்பு, குங்குமப்பூ, அரைத்த பாதாம், பாசுமதி அரிசி சேர்த்து கலந்து, 1 விசில் வரும்வரை வைத்து எடுக்கவும். சீவின பாதாம் சேர்த்து பரிமாறவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT