போடியில் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கூலித் தொழிலாளி வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
போடி வலசைத்துறை சாலையில் வசித்து வருபவா் பழனிச்சாமி மகன் முனியாண்டி (40). கூலித் தொழிலாளியான இவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்ததாம். இதனால், அவதிப்பட்டு வந்த அவா் வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து போடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.