மகளிர்மணி

முகப்பொலிவு பெற...

அ . ப . ஜெயபால்

ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது தேன், வாழைப்பழம் சேர்த்து கலந்து முகம், கழுத்துப் பகுதிகளில் பூசிவர பருக்களால் உண்டான வடுக்கள், கருந்திட்டுகள் மறையும்.

பாதி கிவிப்பழம் மசித்து அதனுடன் தயிர் 1 தேக்கரண்டியை சேர்த்து நன்றாகக் கலந்து, முகம், கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும்.  பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.  கிவிப் பழத்தில் வைட்டமின் சி உள்ளது. இது முகத்தை பொலிவாக்குகிறது. தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம் சரும செல்களைப் புத்துயிர் பெற செய்கிறது.

தக்காளி பழச்சாறுடன் அரிசி ஊற வைத்துக் கழுவிய நீர் சேர்த்து உடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து இந்தப் பேஸ்ட்டை 15-20 நிமிடங்கள் முகம், கழுத்தில் பூச பளபளக்கும். சிவந்த சருமம் கிடைக்கும்.

தேன், பப்பாளி இரண்டையும் நன்றாக பேஸ்ட் செய்யவும். இந்தப் பேஸ்ட்டை உங்கள் முகம், கழுத்து முழுவதும் தடவவும். உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். முகம் பளபளப்பாக பளிச்சென இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT