மகளிர்மணி

பூண்டு சாதம் 

27th Nov 2022 06:00 AM | செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

தேவையான பொருள்கள்: 

வடித்த சாதம் - ஒரு கிண்ணம்
நல்லெண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2  தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1/2  தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 1
சிறு பூண்டு - 15 பல்
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை- சிறிதளவு

செய்முறை:  

ADVERTISEMENT

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு காயந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து,  வெங்காயத்தை சேர்த்து சிவக்க வதக்கவும். பிறகு நறுக்கிய பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி , பூண்டின் பச்சை வாசனை போனவுடன் சாதம் சேர்த்து நன்றாக கிளறி, மிளகுத்தூள், கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.  சுவையான பூண்டு சாதம் தயார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT