மகளிர்மணி

புடவைக்கு மேட்சிங் பிளவுஸ் தேர்வு செய்வது எப்படி?

13th Nov 2022 06:00 AM | செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

புடவைக்கு எப்போதும் அதே நிறத்தில் பிளவுஸ்களைத் தவிர்த்து, கான்ட்ராஸ்ட் நிறத்தில் அணியும்போது எடுப்பான தோற்றத்தை அளிக்கும்.

துணிகளின் மெட்டீரியல் ரகங்கள் மாறுபடும்போது வித்தியாசம் கட்டாயமாக இருக்கக் கூடும். 

ஒருசில புடவையுடன் உள்ள அட்டாச்டு பிளவுஸ்கள், அவற்றின் ரகத்துக்கேற்ப நெகிழ்வுத் தன்மையுடன் இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

அவரவர் உடலமைப்புக்கு தகுந்தாற்போல் ஒருசில டிசைன்கள் அழகை மெருகேற்றிக் காட்டும். 

பிறருக்கு அழகாக உள்ளதே என அதே டிசைனில் முயற்சிக்கும்போது நமக்கு சொதப்பி விட வாய்ப்புள்ளது. எனவே, நம் உடலமைப்புக்கு ஏற்ற பிளவுஸ் டிசைன்களை தைக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

துணிகளை தைக்கும்போது ஸ்ட்ரெயிட் கட்டிங், கிராஸ் கட்டிங் என இரு வழிகள் பயன்படுத்தப்படுகின்றன. உடல் அமைப்புகளுக்கு ஏற்ப இந்த வழிமுறைகள் மாறுபடும்போது பிட்டிங்கும் சரிவர அமையும். எனவே, நமது பேஷன் டிசைனரிடம் கலந்தாலோசித்து  உடலமைப்புக்கேற்ற கட்டிங்ûஸ தேர்வு செய்ய வேண்டும்.

நாம் விரும்பியதை, நமக்கு பிடித்தமான டிசைன்களை டெய்லரிடம், வாய் வார்த்தைகளாகக் கூறாமல், ஒரு வரைபடமாகவோ அல்லது, முடிந்தால் புகைப்படத்தின் மூலமாகவோ தெளிவுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், டிசைன்கள் மாறிவிட வாய்ப்புள்ளது. இதனால், பிளவுûஸ அணியும்போதெல்லாம், ஒருவித டென்ஷனுடன், உற்சாகப் பொலிவின்றி காணப்படுவீர்கள்.

தோல்பட்டை, பின் கழுத்துப்பகுதி, ஆம்கோல் போன்ற இடங்களில் எந்தவிதச் சுருக்கமும் இன்றி பர்பெக்டாக இருந்தால், நம் தோற்றமும் பிறரின் பார்வைக்கு எடுப்பாக இருக்கும்.

பிளவுஸ்கள் புடவையின் அழகை தூக்கிக் காட்டுவதால், கூடுதல் கவனமுடன் இருப்பது அவசியம். எனவே, புடவையில் எம்பிராய்டரிங், அழகிய வேலைப்பாடுகள் ஹெவியாக இருந்தால், பிளவுஸ் எளிமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அழகிய லுக் கிடைக்கும்.

இந்த மெட்டீரியல் மிகவும் காஸ்ட்லியானது.  இதே டிசைனில் மீண்டும் கிடைக்காது என்பது உள்பட பல்வேறு காரணங்களால், பல ஆண்டுகளுக்கு ஒரே பிளவுûஸ திரும்பத்திரும்ப வைத்து அணிய பலரும் முயற்சிப்பர். இதனால், பிளவுஸின் உட்பகுதியில் கூடுதலாக ஒருசில இன்ச் அளவுக்கு துணியை விட்டு தைக்க வலியுறுத்துவர். அப்போது கட்டாயமாக சரியான பிட்டிங் அமையாது என்பதால் அதனை தவிர்க்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT