மகளிர்மணி

பாதத்தைக் கவனியுங்க..!

26th Jun 2022 04:24 PM | செளமியா சுப்ரமணியன்

ADVERTISEMENT

 

எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும் சில பாஸ்பரஸ் இதில் உள்ளன. எல்.டி.எல். கொழுப்பைக் குறைத்து, ஹெச்.சி.எல். கொழுப்பை அதிகரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை இஞ்சி பாதுகாக்கிறது. சளி, காய்ச்சலின் அறிகுறிகளை உணர்த்த பாரம்பரியமாக இஞ்சி பயன்படுத்தப்படுகிறது.

வெதுவெதுப்பான நீரில், காலை, இரவில் தினமும் பாதத்தைக் கழுவிவிட்டு தேங்காய் எண்ணெய் தடவினாலே பாத வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். இதனால் பாதங்களின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிறது.

வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவியவுடன் 20 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, உங்கள் பாத சருமத்தின் தன்மை, ஈரப்பதத்தை அதிகரிக்க செய்கிறது.

ADVERTISEMENT

வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து அதில், பாதங்களை 20 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் கழுவவும். இதனை தொடர்ச்சியாக செய்து வந்தால், பாதவெடிப்பு குறைவதுடன், சருமம் புத்துணர்ச்சியும் பெறும்.

பாதங்களை அவ்வப்போது நன்கு தண்ணீரில் கழுவுவது நல்லது. உடலைச் சுத்தம் செய்யும் அளவுக்கு பாதங்களைப் பலரும் சுத்தம் செய்வதில்லை. நன்கு சோப்பு போட்டு கழுவுவதால், கால் வெடிப்புகளைத் தவிர்க்கலாம்.

இரவு நேரத்தில் கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவி, காலுறை அணிந்து கொண்டு உறங்க செல்லுங்கள். காலையில் எழுந்து பாதங்களை கழுவலாம். ஒருவாரம் தொடர்ந்து இதனை செய்து வந்தால், வறண்ட பாதங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும், மிருதுவாகவும் காட்சியளிக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT