மகளிர்மணி

மாங்காய் பச்சடி

31st Jul 2022 06:00 AM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை:

மாங்காய்-2
தேங்காய்- அரை மூடி
தயிர்-100 கிராம்
பச்சை மிளகாய்-3
சர்க்கரை- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
பால் - 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

மாங்காய், தேங்காயைத் துருவ வேண்டும். தயிர் புளிப்பில்லாத கெட்டித் தயிராக இருக்க வேண்டும். பச்சை மிளகாய் விதை இல்லாமல் நறுக்க வேண்டும். மாங்காய்த் துருவல், தேங்காய்த் துருவல், உப்பு, தயிர், பச்சை மிளகாய், சர்க்கரை, பால் எல்லாவற்றையும் சேர்த்து, பாத்திரத்தில் போட்டு கலக்க வேண்டும்.  எண்ணெய் நன்றாகக் காய வைத்து கடுகு போட்டு தாளித்து பச்சடியில் போட்டுக் கலக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT