மகளிர்மணி

மாங்காய் காராமணி குழம்பு

31st Jul 2022 06:00 AM | ஆர்.ஜெயலட்சுமி

ADVERTISEMENT

 

தேவையானவை: 

மாங்காய்-  நடுத்தர அளவில் 2
காராமணி- 150 கிராம்
தனியா தூள்- 3 தேக்கரண்டி
சீரகத்தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள், பூண்டு விழுது- தலா அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள்- சிறிதளவு
கடுகு, வெந்தயம், வேப்பிலை, எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை: 

ADVERTISEMENT

மாங்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் காராமணி, நறுக்கிய  தேங்காய்த் துண்டு ஆகியவற்றை இட்டு, போதுமான நீர் சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் மசாலா தூள்கள், பூண்டு விழுது இவற்றை இட்டு, தேவையான அளவு நீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கலவை நன்கு வெந்து, வாசனை வந்தவுடன் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, தாளித்துவிட்டு,  இறக்கவும், மாங்காய் காராமணி  தயார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT