மகளிர்மணி

சமையல் குறிப்புகள்

17th Jul 2022 06:00 AM | உ.ராமநாதன்

ADVERTISEMENT

 

உளுந்து வடை மேலும் மிருதுவாக, ருசியாக இருக்க மாவுடன் சிறிது சமையல் சோடாவை நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைத்து, வடைகளாகப் பொரித்து எடுக்கவும்.

மோர்க் குழம்பு செய்யும்போது, அன்னாசி பழத் துண்டுகள் நறுக்கி சேர்த்துக்கொண்டால் மிதமான வாசனையுடன் சுவையாக இருக்கும்.

அடைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைக் கீரை இட்டு நன்கு கலந்து, அடை வார்த்தால் அற்புதமாய் இருக்கும்.

ADVERTISEMENT

கேசரி செய்யும்போது கொஞ்சம் பால் பௌடர் சேர்த்துக்கொண்டால், உதிரியாகவும் , மென்மையாகவும் இருக்கும்.

கொண்டைக் கடலையை முளை கட்டி எடுத்து, பின்னர் அவிழ்த்து சுண்டல் செய்தால், மிகவும் சுவையாக இருக்கும். சத்துகள் அதிகமான சுண்டல் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT