மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!:  மீண்டும் ரோஷினி!

26th Jan 2022 06:00 AM | - ஸ்ரீ

ADVERTISEMENT

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் "குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்கு "பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு இருப்பது போலவே ஒரு தனி ரசிகர் வட்டமே உள்ளது. இதனாலேயே முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் சீசனுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. மேலும், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் சிலர் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றனர்.

இந்நிலையில், தற்போது "குக் வித் கோமாளி - சீசன்3' தொடங்கவுள்ளது. எனவே, சீசன் -3 -இல் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது.

அந்த வகையில், இந்த சீசனில் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் இடம் பெறுகிறார். இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபல தொடரான "பாரதி கண்ணம்மா'வில் கண்ணம்மாவாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தவர். திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக கூறி அண்மையில் இந்த தொடரில் இருந்து விலகியவர், தற்போது, குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளவிருப்பதாக சோஷியல் மீடியாவில் பரப்பரப்பாக செய்திகள் பரவி வந்தன.

ADVERTISEMENT

இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது வெளியாகியுள்ள விஜய் டிவியின் புரோமோவில் ரோஷினி இடம் பெற்றுள்ளார். மேலும், இவருடன் சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிரேஸ் கருணாஸ் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சி ஜனவரி கடைசியில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT