மகளிர்மணி

சமையல் குறிப்புகள்...

கவிதா சரவணன்

கத்தரிக்காய் கூட்டு, பொரியல் செய்யும்போது கொஞ்சம் கடலை மாவைத் தூவிப் பாருங்கள்.  கூட்டு, பொரியல் சுவையாக இருக்கும்.

கூட்டு செய்யும்போது தேங்காய்க்குப் பதில் பொட்டுக்கடலை, சீரகம், பச்சை மிளகாய் அரைத்து சேர்த்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

தயிர் சாதத்தில் கடுகுக்குப் பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.  இது அஜீரணத்துக்கு மிகவும் நல்லது.

விருந்துக்கு சாப்பிட போகும் முன் ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு சிறிய மேஜை கரண்டி பட்டைப் பொடி சேர்த்து நன்றாகக் கலந்து சாப்பிட்டால், விருந்து சாப்பிட்டவுடன் ஜீரணம் ஆகும்.

தோசை கல்லில் தோசை சுடும்போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறுமொறுப்பாக வரும்.

கருவேப்பிலை காய்ந்துவிட்டால் அதனை தூக்கி எறிந்துவிடாமல் இட்லி பானையின் அடியில் தண்ணீரில்,  கருவேப்பிலையைப் போட்டு இட்லி சுட்டால் வாசனையாக இருக்கும்.

வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும்இருக்கும்.

மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால், அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வென்னீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும். பின்பு நீரை கீழே ஊற்றிவிட்டு பிளேடை கழற்றினால் 
எளிதில் கழற்றலாம்.

உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது புளிப்பு இல்லாத தயிர் அரைக்கரண்டி ஊற்றி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு,  மஞ்சள் தூள்,  மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து,  அதனைத் தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

இட்லி சுடும்போது மாவில் ஒரு கிண்ணம் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து இட்லி சுட்டால் மிருதுவாக இருக்கும். இரண்டு நாள்கள் கெடாமலும் இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடுதண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

தோசை சுடும்போது தோசைக் கல்லில் மாவு ஒட்டிக் கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி,  அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

மின்கம்பங்கள் சீரமைப்பு பணியை துரிதப்படுத்த வலியுறுத்தல்

இன்று யோகமான நாள்!

மக்களவை 2-ஆம் கட்ட தோ்தல்: கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT