மகளிர்மணி

சின்னத்திரை: மின்னல்கள்!

22nd Sep 2021 06:00 AM | -ஸ்ரீ

ADVERTISEMENT

 

சன் தொலைக்காட்சியில் சித்தி 2, விஜய் தொலைக்காட்சியில் "தமிழும் சரஸ்வதி' என இரு தொடர்களிலும் கெத்தான மாமியாராக வலம் வரும் மீரா கிருஷ்ணன், தனது சின்னத்திரை என்ட்ரி குறித்து கூறுகிறார்:

""ஏழு ஆண்டுகளுக்கு முன்பு "பொக்கிஷம்' என்ற தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானனேன். அந்தத் தொடருக்குப் பிறகு எனது இரண்டாவது மகன் பிறந்துவிட்டதால், நடிப்பிலிருந்து விலகியிருந்தேன். இந்த சமயத்தில்தான் 2018-இல் சன் டிவியில் "நாயகி' தொடரில் நடிப்பதற்கு அம்பிகா மேடம் மூலம் வாய்ப்பு வந்தது. அவங்கதங்கச்சி கதாபாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பேன்னு அவங்கதான் என்னை பரிந்துரை செய்திருக்காங்க.

ஆனால், இவ்வளவு சீக்கிரம் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கணுமா, அது எனக்கு பொருத்தமா இருக்குமா என்று நினைத்துக் கொண்டு வேறு ஏதாவது கதாபாத்திரம் இருக்கா என்று டைரக்டரை பார்த்து கேட்டேன். அவர், என்னைப் பார்த்ததும், "இந்த கேரக்டர் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். நிச்சயம் நல்ல வரவேற்பு இருக்கும் தைரியமா செய்யுங்க' என்றார். அந்த நம்பிக்கை வீண் போகல. அவர் சொன்ன மாதிரியே , நானே எதிர்பார்க்காத அளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மூலம்தான், இப்போ "சித்தி 2' இல் மல்லிகாவாகவும், "தமிழும் சரஸ்வதி' தொடரில் கோதையம்மாவாகவும் வந்திட்டிருக்கேன்.

ADVERTISEMENT

"சித்தி 2'இல் வந்தபோது, ஆரம்பத்தில் வில்லியாக என்னை திரையில் பார்க்க எனக்கே புதுசாக இருந்தது. உடல்மொழிக்கு ஏற்ற மாதிரி குரலை உயர்த்தி பர்ஃபார்ம் பண்ணணும். என்னுடைய முழு திறமையையும் இந்தக் கேரக்டர் மூலமா வெளிப்படுத்துறேன்னு நம்புறேன்.

"தமிழும் சரஸ்வதியும்' தொடரில் எதிலும் ரொம்ப உறுதியா இருக்கிற போல்டான கேரக்டர். இதுபோன்ற கேரக்டரில் நான் இதுவரை நடித்ததில்லை. அதனால், இது எனக்கு சவாலான கதாபாத்திரமாக இருக்கிறது. மற்றபடி இந்த செட்டே ரொம்ப ஜாலியான செட் . ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது வீட்டில் இருக்கிற ஃபீல்தான் இருக்கிறது'' என்றார்.

Tags : magaliarmani மின்னல்கள்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT